• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

அம்மா பிறந்தநாள், நாடாளுமன்றத் தேர்தல் குறித்து சிவகங்கை மாவட்ட அம்மாபேரவை செயலாளர் இளங்கோவின் தலைமையில் ஆலோசனை கூட்டம்

ByG.Suresh

Feb 11, 2024

அம்மா பிறந்தநாள் மற்றும் சிவகங்கை நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் புரட்சி தலைவி அம்மா பேரவை சார்பில் அம்மா அவர்களின் பிறந்த நாளான பிப்ரவரி 24 ந்தேதி அம்மா பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் அதற்கான ஆலோசனை கூட்டம் அம்மா பேரவை செயலாளர் இராமு. இளங்கோவன் தலைமையில், அதிமுக சிவகங்கை மாவட்ட செயலாளரும் சிவகங்கை எம்எல்ஏ செந்தில்நாதன் முன்னிலையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சிவகங்கை மாவட்ட கழக செயலாளர் செந்தில் நாதன் எம் எல் ஏ அம்மா அவர்களின் பிறந்த நாளில் கட்சியின் அனைத்து பொருப்பாளர்களும் சார்பு அணி நிர்வாகிகள் அனைவரும் முதியோர் இல்லங்கள், மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள்,ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்களைச் சந்திக்கும் போது புரட்சி தலைவர் எம் ஜி ஆர் புரட்சி தலைவி அம்மா எடப்பாடி பழனிசாமி ஆகியோர் செய்த மக்கள் நலத்திட்டங்களை எடுத்துக் கூறி குறிப்பாக சிவகங்கையில் நமது இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றி பெற வைத்து எடப்பாடியாருக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று பேசினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உமாதேவன், குணசேகரன், கற்பகம் இளங்கோ , சிவகங்கை ஒன்றிய செயலாளர் செல்வமணி,காளையார் கோவில் ஒன்றிய செயலாளர்கள் , சேவியர்ராஜ், அருள் ஸ்டீபன் மற்றும் ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.