விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் சிவகாசி பட்டாசு நகர் அரிமா சங்கம் சார்பாக கண் தானம் செய்த 200 குடும்பங்களை கௌரவிக்கும் விழா நடைபெற்றது.

நிகழ்சிக்கு கண்தான உலக சாதனையாளர் அரிமா.டாக்டர்.ஜே. கணேஷ் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் கே.டி.இராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு கண் தானம் செய்த 200 குடும்பங்களுக்கும் உடல் தானம் செய்த 4 குடும்பங்களுக்கும் சால்வை அணிவித்து கேடயம், சான்றிதழ் வழங்கி பாராட்டி பேசியது

கண்தானம் என்பது ஒரு தொலைநோக்குத் திட்டத்தோடு, சேவை மனப்பான்மையுடன் 4729- பேர்களிடமிருந்து கண்களை தானமாக பெற்று 19- ஆயிரம் பேருக்கு கண்ணொளி கிடைக்கச் செய்துள்ள சேவை பாராட்டுதலுக்குரியது. இந்தியாவில் கருவிழியால் பாதிக்கப்பட்டுள்ள 30- லட்சம் பேருக்கு மீண்டும் பார்வை கிடைக்க கருவிழி அறுவைச் சிகிச்சை தான் ஒரே மாற்று வழி. இதற்கு ஒரே தீர்வு இறந்தவர்களிட மிருந்து கண்களை தானமாக பெறுவது தான். இறந்த பின்பும் கண்களை, உடல் உறுப்புகளை தானமாகக் கொடுத்து சமூக நீதிப் புரட்சி செய்துள்ளார்கள். கண்தானம் பெறுவதில் இந்தியாவிலேயே குஜராத் முதலிடத்திலிருந்து, தமிழகத்தின் சிவகாசி இரண்டா மிடத்தை வகிக்கிறது. கண் தானம் செய்வதால் தான தர்மம் பெருகி, வகுப்புவாதம், மதவாதம், இனவாதம் ஒழியும்,ச தான தர்மங்கள் தலைதூக்கி சிறந்தோங்கும். என்றார்.

முன்னதாக உலக அமைதிக்காகவும், இறந்த பின்பு கண்தானம், உறுப்பு தானம் செய்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும் அனைவரும் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினார்கள் .நிகழ்ச்சியில் முன்னாள் அரிமா சங்க மாவட்ட ஆளுநர் சுயம்புராஜன், டாக்டர் அனிதா வேணுகோபால், நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை மக்கள் தொடர்பு அதிகாரி சாரதா, கண் தான ஒருங்கிணைப்பாளர் மருதம்மாள், அரிமா சங்கத்தின் வட்டாரத் தலைவர் காமராஜ் பட்டாசு நகர் அரிமா சங்கத்தின் தலைவர் பாலசந்தர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பட்டாசு நகர் அரிமா சங்க நிர்வாகிகள் மணிகண்டன் செல்வராஜ் நன்றி கூறினர்.













; ?>)
; ?>)
; ?>)