• Tue. Sep 23rd, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

குழந்தையை தூக்கி சென்ற ராணுவ வீரர் மீது வழக்கு..,

ByM.Bala murugan

Nov 4, 2023

மதுரை சோழவந்தான் பகுதியை சேர்ந்தவர் சூரியபிரகாஷ். இவரது மனைவி கார்த்திகாராஜி. இருவருக்கும் திருமணமாகி ஒரு ஆண்டு ஆகிய நிலையில் தற்போது 3-மாத ஆண் குழந்தை பிறந்து கார்த்திகாராஜு தனது தாய் வீடான பாலகிருஷ்ணா புரத்திற்கு சென்று விட்டார்.

சூரியபிரகாஷ் இந்திய ராணுவத்தில் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்த நிலையில் தற்போது விடுமுறையில் ஊர் திரும்பியதாக கூறப்படுகிறது. இதனிடையே தனது மனைவியை தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார்.

அதற்கு மனைவி வரமறுத்ததால் ஆத்திரத்தில் 30 ஆம் தேதி மாலை மனைவியின் வீட்டுக்கு சென்று, மனைவியுடன் தகராறு செய்து வீட்டையும் அடித்து நொறுக்கியதுடன், தம்பதியினருக்கு பிறந்த 3 மாத ஆண் குழந்தையை வலுக்கட்டாயமாக அவரது மனைவியிடமிருந்து பறித்து சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் சோழவந்தான் காவல் நிலையத்தில் மனைவி கார்த்திகா 31 ஆம் தேதி புகார் அளித்ததால் ஆத்திரமடைந்த ராணுவ வீரர் சூரியபிரகாஷ், அன்று இரவு மீண்டும் தனது நண்பர்களுடன் குடிபோதையில் மனைவியின் வீட்டிற்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அருகில் நின்ற உறவினர்களையும் சராமரியாக தாக்கியுள்ளார். தொடர்ந்து, சூரிய பிரகாஷ் தனது மனைவி மற்றும் அவரது உறவினர்களை தாக்கியது தொடர்பாக கிராம மக்கள் புகார் அளித்ததற்கு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருதரப்பு தகராறையும் தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்து உள்ளனர்.

அப்போது சம்பவ இடத்திற்கு வந்த சோழவந்தான் சார்பு ஆய்வாளர் சேகர் என்பவர் மது போதையில் இருந்த சூரியபிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் ஆகியோரை தடுத்து நிறுத்தாமல் ராணுவ வீரர் என்ற ஒரே காரணத்தினால் காவலர்கள் வேடிக்கை பார்த்ததாகவும்., போலீசார் நிற்கும்பொழுது கார்த்திகாராஜிவின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களை சூரியபிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் தாக்குதல் நடத்தியதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோழவந்தான் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்களும் உறவினர்களும் போலீசாரிடம் வலியுறுத்தியதை தொடர்ந்து., 1 ஆம் தேதி நள்ளிரவு சோழவந்தான் போலீசார் சூரிய பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் உட்பட நான்கு பேர் மீது தகாத வார்த்தைகளால் பேசியது., ஆயுதங்களால் தாக்கியது., உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதத்தில் நடந்து கொண்டது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் வீட்டாரிடம் கேட்டதற்கு,

தனது கணவர் மதுவிற்கு அடிமையானதால் அடிக்கடி தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும்., அதே போல் கல்யாணத்திற்காக வரதட்சணையாக 16 சவரன் நகையுடன் திருமணம் செய்து தற்போது குழந்தை வந்த பிறகு குழந்தைக்கு 10 சவரன் நகை கொடுக்க வேண்டும் இல்லையென்றால் வீட்டை எழுதி கொடுக்க வேண்டும் என கணவர் தனது வீட்டருடன் சேர்ந்து துன்புறுத்தியதால் மன உளைச்சலில் அவர் வீட்டுக்கு செல்ல மறுத்ததாகவும் கார்த்திகாராஜியும் அவரது குடும்பத்தினரும் தெரிவித்துள்ளார்.

இதே போல் ராணுவ வீரர் சூர்யபிரகாஷிடம் கேட்டதற்கு எனது மனைவியை நான் துன்புறுத்தவில்லை., அவர்கள் கூறுவது முற்றிலும் தவறு என்னை பற்றி அவதூறு பரப்புகிறார்கள். எனது தாய் தந்தையரை விட்டு தனி குடித்தம் செய்ய வேண்டும் எனபதற்காக இப்படி செய்கிறார்கள் என்றும் தன்னை பற்றி மனைவி மற்றும் அவரது வீட்டார் கூறுவதற்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ளார்.