• Sat. Oct 12th, 2024

மதுரையில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு

ByKalamegam Viswanathan

May 23, 2023

மதுரை மாவட்டம் திருமங்கலம் புது நகரை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் தனது காரை பழுதுபார்த்துவிட்டு மதுரையில் இருந்து திருமங்கலம் நோக்கி காரை ஓட்டிச் சென்று கொண்டிருந்த போது மதுரா கல்லூரி அருகே சென்றுகொண்டிருந்த போது திடீரென காரின் முன் பக்கத்தில் இருந்து திடீரென கரும்புகை வந்ததுடன் தீ பற்றி எரிய துவங்கி உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராமச்சந்திரன் காரை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டுள்ளார்.

தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சி செய்த நிலையில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சுரேஷ் கண்ணா தலைமையிலான தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் தீயை அணைத்தனர். முதற்கட்ட விசாரணையில் காரில் இருந்த பேட்டரியில் ஏற்பட்ட பழுது காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது கூடும் என தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து சம்பவம் குறித்து ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *