• Sat. Dec 27th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பாதயாத்திரை சென்றவர்கள் மீது கார் மோதி விபத்து

ByArul Krishnan

Feb 25, 2025

திட்டக்குடி அருகே சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்றவர்கள் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்துள்ள எழுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் அடுத்துள்ள ஐவகுடி கிராமத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை ஆக புறப்பட்ட நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் நடந்து சென்ற போது, பின்னால் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானதில் அண்ணாதுரை மகன் கார்த்திக்ராஜா (23) சம்பவ இடத்திலேயே பலி மேலும் ராஜ் மகன் பாலு முருகன் (26)மற்றும் சிவாஜி மகன் காசிவேல்(27) உயிருக்கு ஆபத்தான நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் பாலமுருகன் உயிரிழந்தார் .

காசிவேல் உயிருக்கு ஆபத்தான நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவிடத்திற்கு வந்த ராமநத்தம் போலீசார் கார்த்திக் ராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாலமுருகன் மற்றும் காசிவேல் உடல் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதயாத்திரை சென்றவர்கள் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பைர் இறந்த சம்பவம் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.