• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வாடிப்பட்டியில் வ.உ.சிக்கு வெங்கலசிலை அமைக்க வேண்டும்… சங்க கூட்டத்தில் தீர்மானம்..,

ByN.Ravi

Sep 12, 2024

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வெள்ளாளர் உறவின்முறை சங்கம் சார்பாக,
வ உ சி-153வது, பிறந்தநாள் விழாவையொட்டி, 300 மகளிர் கலந்து கொண்ட முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
இந்த ஊர்வலத்தில், கரகம் சுமந்து கலைஞர்கள் ஒயிலாட்டம் ஆடிட தாரை தப்பட்டை முழங்க பழைய நீதிமன்றத்திலிருந்து புறப்பட்டு, யூனியன் ஆபீஸ் பிரிவு, காவல் நிலையம், பஸ் நிலையம் வழியாக சந்தை பாலம் அருகில் முருகன் கோவிலுக்கு வந்தது.
அங்கு அலங்கரித்து வைக்கப்பட்ட வ. உ. சி. உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டு பொதுமக்களுக்கு, இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு, சங்கத்
கெளரவத் தலைவர் பாபநாசம் தலைமை தாங்கினார். சங்கத் தலைவர் தங்கராஜ், வி.எம்.சி. செயலாளர் கந்தசாமி, துணைத்தலைவர் சோமசுந்தரம், இணைச் செயலாளர் ராமசாமி, சொக்கலிங்கம், சுரேஷ், கலை கார்த்திகேயன், இம்பா மாவட்ட தலைவர் சங்கரலிங்கம், நடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சங்கச் செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். இந்த முளைப்பாரி ஊர்வலத்தை, வெள்ளாளர் முன் னேற்ற கழக மாநில மகளிர் அணி தலைவி அன்னலட்சுமி சகிலா கணேசன் துவக்கி வைத்தார். சோழவந்தான் பேரூராட்சித் தலைவர் ஜெயராமன், தி.மு.க. பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் ஆகியோர் மலர் தூவினர். கவுன்சிலர் கீதா பால சரவணன் இனிப்பு வழங்கினார்.
இதில் ,மாநில தலைமை ஆலோசகர் முருகேசன், தி.மு‌.க சீனிவாசன், அனைத்து முதலியார் பிள்ளைமார் பேரவை கூட்டமைப்பின் மாநில அமைப்பு செயலாளர் வெங்கடாசலம், வாடிப்பட்டி சங்க துணைத் தலைவர் முருகவேல் ஆகியோர் பேசினர்.
மேலும்,வாடிப்பட்டியில் வ உ சிக்கு வெங்கல சிலை அமைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிர்வாகிகள் ராஜேந்திரன், மாரியப்பன் குப்புசாமி, வைரமுத்து, பாலகிருஷ்ணன்,நாகமுத்து ராஜா, சோணைபாண்டி, மனோஜ் கார்த்திக், பாலகுமார், ராம்மோகன், அங்காளஈஸ்வரி, சிலம்பரசி, முத்துலட்சுமி, ராணி, இல்லத்து பிள்ளை மோகன், பழனிகுமார் மற்றும் பாலமேடு, அழகாபுரி, முடுவார்பட்டி மட்டப்பாறை, ராமராஜபுரம், முள்ளிப்பள்ளம், டிவி நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில், பொருளாளர் சந்தன
பாண்டி நன்றி கூறினார்.