• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இபிஎஸ் கோட்டையில் விழுத்த பெரிய ஓட்டை

ByA.Tamilselvan

Dec 2, 2022

இபிஎஸ் கோட்டை என கூறப்படும் சேலத்தில் இருந்து அதிமுகவினர்
200 பேர் தங்கள் ஆதரவை ஓபிஎஸ்க்கு தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு, அதிமுகவில் பதவிக்கான பஞ்சாயத்து தொடங்கியது.இந்த விவகாரத்தில், பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்களை எடப்பாடி பழனிச்சாமி தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்ததால், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் ஆனார். கட்சியில் பிரிவினையை ஏற்படுத்த முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டு ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில் எடப்பாடியின் கோட்டையில் பெரிய ஓட்டை விழுந்துள்ளது.
சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் ,முன்னாள் நகரதலைவர் சிவசுப்பிரமணியம், ஆகியோர் முன்னிலையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 200 பேர் ஓபிஎஸ் அணியில் இணைந்துள்ளனர்.அதிமுகவை இபிஎஸ் ஒரு குறிப்பிட்ட சமுதாய இயக்கமாக மாற்ற முயற்சித்து வருகிறார்.அதை தடுப்பதற்காக ஓபிஎஸ் அணியில் இணைதுள்ளதாக அவர்கள் கூறினர்.