• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுட்டு அசத்திய 92 வயது மூதாட்டி

ByT. Vinoth Narayanan

Feb 27, 2025

ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவராத்திரியை முன்னிட்டு, கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுட்டு 92 வயது மூதாட்டி அசத்தியுள்ளனர்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் முதலியார் பட்டித் தெருவில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வருடம் தோறும் சிவராத்திரி அன்று நள்ளிரவில் வெறும் கையினால் கொதிக்கும் நெய்யில் அப்பம் சுடும் நிகழ்ச்சி நடைபெற்று வருவது வழக்கம். இந்த ஆண்டு மகாசிவராத்திரியை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் இந்த பகுதியில் வசிக்கும் முத்தம்மாள் (92வயது) மூதாட்டி மற்றும் கோவில் பூசாரிகள் எரியும் விறகு அடுப்பில் நெய்யை கொதிக்கவிட்டு, அதில் பனைவெல்லம் கலந்த அரிசி மாவினால் செய்யப்பட்ட அப்பங்களை கொதிக்கும் நெய்யில் போட்டு கரண்டியை பயன்படுத்தாமல் வெறும் கையால் அப்பத்தை எடுத்து, கர்த்தருக்கு வழங்குவார்கள். இதனை சுற்றி நின்றிருந்த ஏராளமான பக்தர்கள் பார்த்து பத்திரகாளி அம்மனை வணங்கினர்.

மூதாட்டி முத்தம்மாள் கொதிக்கும் நெய்யை எடுத்து இக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நெற்றியில் பூசி விட்டு, அப்பத்தை பிரசாதமாக வழங்கினர். இந்நிகழ்ச்சியை நள்ளிரவு நேரத்திலும் ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் கண்டு களித்தனர். மகாசிவராத்திரி அன்று முத்தம்மாள் என்ற மூதாட்டி கடந்த 52 ஆண்டுகளாக அப்பம் சுட்டு வருகிறார். இதற்காக 40 நாட்களாக விரதம் இருந்து அப்பம் சுடுவது குறிப்பிடத்தக்கது.