• Fri. Nov 28th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தமிழக மீனவர்களை சந்திக்க 5 பேர் கொண்ட குழு இலங்கை பயணம்..,

ByPrabhu Sekar

Mar 25, 2025

தமிழகம் பகுதிகளான ராமேஸ்வரம் புதுக்கோட்டை பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்று வரும் பொழுது எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நீண்ட நாட்களாக சிறையில் இருக்கும் மீனவர்களையும் தமிழக பகுதிகளில் இருந்து கைது செய்யப்பட்ட மீனவர்களையும் சந்திப்பதற்காக ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த விசைப்படகு மீனவர் சங்க ஒருங்கிணைப்பாளர் சேசு ராஜா அவர்கள் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்திற்கு சென்றனர்.

முன்னதாக சென்னை விமான நிலையம் வந்து அவர்கள் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஐந்து பேர் கொண்ட குழுவாக ஜாப்னா விமான மூலம் யாழ்ப்பாணத்திற்கு புறப்பட்டு சென்றனர். யாழ்ப்பாணம் சென்று அங்கு தமிழக மீனவர்கள் அனைவரையும் சந்திக்க திட்டமிட்டு இருப்பதாகவும் இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மீன்வளத்துறை அமைச்சரை சந்திக்க இருப்பதாகவும் தகவல் தெரிவித்தனர்.

மேலும் இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளின் நிலைகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல் தெரிவித்தனர். தமிழக மீனவர்கள் கைது செய்யும் நடவடிக்கைகளை தவிர்க்கும் விதமாக ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல் தெரிவித்தது.