• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கேரளாவில் ஆற்றுக்கு நடுவில் அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்சியின் 30 அடி உயர கட்-அவுட்

கேரளாவில் கால்பந்து போட்டிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னணி வீரர்கள் பலருக்கும் கேரளாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் கால்பந்து வீரர்களின் ஜெர்சி அணிந்தும், அவர்களை போலவே விளையாடியும் தங்கள் அன்பை வெளிப்படுத்தி வந்தனர். இந்த நிலையில் கோழிக்கோடு மாவட்டம் செருபுழா பகுதியை சேர்ந்த கால்பந்து ரசிகர்கள் அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சியின் 30 அடி உயரம், 8 அடி அகலம் கொண்ட ராட்சத கட்-அவுட்டை உருவாக்கினர். இந்த கட்-அவுட்டை அவர்கள் செருபுழா ஆற்றின் நடுவே வைத்தனர். ஆற்றின் நடுவே அமைக்கப்பட்டுள்ள மெஸ்சியின் கட்-அவுட் அந்த வழியாக சென்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அவர்கள் அதனை செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.