அரசு மருத்துவரிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித்திவாரி மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
திண்டுக்கல் அரசு டாக்டரிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் லஞ்ச ஒழிப்புத்
துறையினரால் கைதுசெய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை நீதிமன்ற உத்தரவில் திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது, அவர்
மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். கடந்த இரண்டு நாட்களாக அவர் உணவு
உட்கொள்ளாமல் இருந்து வந்துள்ளார்.
சிறையில் தொடர்ந்து அழுது கொண்டே இருப்பதாகவும், மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், அவருக்கு மனநல ஆலோசகர், தற்கொலை தடுப்பு ஆலோசகர் உள்ளிட்டோர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அரசு மருத்துவரிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில், கைதானஅமலாக்கத்துறை அதிகாரி – மதுரை மத்திய சிறைக்கு மாற்றம் மனஅழுத்தத்தில் கதறல்..,
