• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

மதுரையில் புதிய உலக சாதனை படைத்த மாணவ,மாணவிகள்

Byகுமார்

Nov 14, 2022

மதுரையில் சந்திர நமஸ்கார யோகா தொடர்ச்சியாக ஒரு மணி நேரமும் மற்றும் பரதநாட்டியம் தொடர்ச்சியாக ஒரு மணி நேரமும் செய்து புதிய சோழன் உலக சாதனை படைத்த மாணவ மாணவிகள்
மதுரை நாராயணா பள்ளியில் சைன் யோகா வெல்பர் டிரஸ்ட் மற்றும் கலாபவன் கல்ச்சுரல் அகாடமி சார்பில் சோழன் உலக சாதனை புத்தகம் முன்நிலையில் 135 மாணவ மாணவிகள் பங்கேற்ற சந்திர நமஸ்காரம் யோகா ஒருமணி நேரம் தொடர்ச்சியாக செய்தனர் தொடர்ந்து 75 மாணவிகள் ஒரு மணி நேரம் பரதநாட்டியம் ஆடி புதிய சோழன் உலக சாதனை படைத்தனர். இன் நிகழ்ச்சியை பள்ளியின் முதல்வர் ஜோதிஎல்லார் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார், சைன் யோகா வெல்பர் டெஸ்ட் கலையரசி மற்றும் கலாபவன் கல்ச்சுரல் அகாடமி ராஜமீனாட்சி மாணவ மாணவிகளை வழி நடத்தினர் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் நிறுவனர் நிமலன் நீலமேகம் தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் யோகா பவுண்டேசன் சிவசண்முகம் நிறைவுரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் ஆர்த்திகா நிமலன், சுந்தர், சண்முகபிரியா ,யோகலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.