• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் அடிதடி ரகளை ..வைரல் வீடியோ

ByA.Tamilselvan

Nov 9, 2022

தென்னிந்திய மொழிகளில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ தற்போது தமிழில் 6 வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.ப ரபரப்புகளுக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாத ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் சீசன்-6 அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கியது.. 20 போட்டியாளர்களுடன் அட்டகாசமாக துவங்கி சிலவாரங்களை கடந்துள்ளது .போட்டியாளர்கள் டாஸ்க்கின்போது நடந்து கொள்லும் விதம் காரணமாக பிக்பாஸ் வீடு அவ்வப்போது போர்கலமாக மாறிவருகிறது.


பிக்பாஸ் நிகழ்ச்சியில்இந்த வார டாஸ்க்கின் போது தனலட்சுமிக்கு- நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணிகண்டனுக்கும் இடையே பெரும் கலவரமே வெடித்துள்ளது. தனலட்சுமி கையில் இருந்த பொருளை மணிகண்டன் பிடுங்கியதால் தொடங்கிய வாக்குவாதம் பெரும் ரகளையாகி உள்ளது. ஒரு வாரம் அமைதியாக இருந்த பிக்பாஸ் வீடு மீண்டும் போர்க்களமாக மாறியுள்ளதாக ரசிகர்கள் கூறிகின்றனர்.