• Sat. Dec 6th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மாமனிதன் வைகோ எனும் பெயரில் ஆவணப்படம் துரை வைகோ தயாரிப்பு

மாமனிதன் வைகோ எனும் பெயரில் வைகோவின் மகனும் மதிமுகவின் துணை கழக செயலாளர் துரை வைகோ ஆவணப்படம் தயாரித்துள்ளார்.
அத்திரைப்படத்தை மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உள்ள திரையரங்குகளில் அவர் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் 32வது வெளியீட்டு விழா இன்று ஈரோடு ஆணூர் திரையரங்கில் நடைபெற்றது.
ஆவணப்படம் வெளியிட்டதன் பின்னர் துரை வைகோ செய்தியாளர்களிடம் கூறுகையில், எம்ஜிஆர் ஜெயலலிதா போன்றோரை ஆவணப்படத்தில் தவிர்க்கவில்லை. ஆட்சியைப் பிடிப்பதில் என்ன மாதிரியான கொள்கையை தலைவராக நீங்கள் கடைபிடிக்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்து பேசியவர் தேர்தலில் வெற்றி பெறாமல் இருக்கலாம். ஆனால், வைகோ அவர்கள் முன்னெடுத்த போராட்டங்கள் 80 சதவீத வெற்றி பெற்றுள்ளது. தேர்தலில் வெற்றி பெறுவது மட்டுமல்ல அரசியல் பொது வாழ்க்கையில் மக்களின் பிரச்சினைகள் குறித்து போராடுவதே என்றார். இது தொடர்பான நடைபெற்ற காரசார விவாதத்தில் பால் விலை உயர்வு, மின் கட்டணம், சொத்து வரி உயர்வு போன்ற எந்த மக்கள் பிரச்னைக்கும் இதுவரை மதிமுக சார்பாக அறிக்கை வெளியிடவில்லை. பச்சை மற்றும் நீல நிற பால் பாக்கெட்களுக்கு விலை உயர்வு இல்லை என்றும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நஷ்டத்தை ஈடுகட்டவே தவிர்க்க முடியாத காரணத்தால் பால் நிலையை அரசு உயர்த்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் ஒன்பது கிலோமீட்டர் நடை பயணத்துக்கு பின்னர் சர்வதேச அரசியல் குறித்தும் வலதுசாரி அரசியல் காரணமாக மக்களின் பாதிப்பு குறித்து பேசுகிறார்கள் தேர்தலை பற்றிய ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்றும் தெரிவித்தார்.