• Wed. Sep 24th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக மாற அழைப்பு

இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை அளிப்பவர்களாக மாற வேண்டும்.என்று வேளாளர் கலை அறிவியல் கல்லூரி தாளாளர் எஸ்.டி சந்திரசேகர் கேட்டுக்கொண்டார். தமிழக அரசின் ஸ்டார்ட் அப் தமிழ்நாடு என்ற தொழில் முனைவோர்களுக்கான ஈரோடு பிரிவின் சார்பில் 27 புதிய தயாரிப்பு அறிமுக விழா கல்லூரியில் இன்று நடைபெற்றது. அதில் அவர் பேசியதாவது ,தற்போது நமது நாட்டின்பொருளாதார வளர்ச்சி வளர்ந்த நாடுகளுக்கு இணையாக உள்ளது. நமது நாட்டிலேயே தொழில் வளம் அதிகம் உள்ளது. அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கலாம் எனவே படித்த இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு வேலைத்தேடி செல்லாமல் நமது நாட்டில் புதிய தொழில்களை உருவாக்கவேண்டும் இதற்கு மத்திய மாநில அரசுகளின் ஸ்டார்ட் ஆப் மற்றும் பல்வேறு திட்டங்களின் கீழ் ஊக்கமளிக்கப்படுகிறது. அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். ஸ்டார்ட் அப் தமிழ்நாடு பிரிவின் அசோசியேட் துணைத் தலைவர் சிவக்குமார் பேசுகையில் வேளாண்மானிய கோரிக்கையில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க மாநில அரசு ரூபாய் 10 லட்சம் மானியம் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. மரவள்ளிக்கிழங்கு அறுவடை செய்யும் இயந்திரம், பனைமரம் ஏற உதவும் இயந்திரம், காய்கறிகள், பழங்கள், நீடித்த நாட்கள் இருக்கும் தொழில்நுட்பம் மண்ணின் வளம் மற்றும் வேளாண் பொருள்களின் தன்மையை நிலத்திலேயே கண்டறியும் பரிசோதனை கருவி ஆகியவைகளை உருவாக்க இளைஞர்கள் முன்வந்து அந்த மானியத்தை பெறலாம் என்றார். மற்றொரு அசோசியேட் துணை தலைவர் எஸ். தினேஷ்குமார் 7 ஸ்டார்ட் அப் சமூக குழுக்களை துவக்கி வைத்தார் மார்ச்மாதத்துக்குள் தமிழகம் முழுவதும் 75 குழுக்கள் உருவாக்கப்படும் என்றார் நம்பீசன் பால் நிறுவன மேலாண்மை இயக்குனர் விவேக் நம்பிசன் ஈரோடு பிரிவு ஸ்டார்ட் அப் திட்ட அலுவலர் சக்திவேல் இந்திய தொழில் கூட்டமைப்பு யங் இந்தியா அமைப்பின் ஈரோடு பிரிவு தலைவர் குமாரவேல் தமிழ் மாநில காங்கிரஸ் மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா மற்றும் தொழிலதிபர்கள் தீபா முத்துக்குமாரசாமி ராமமூர்த்தி சுந்தரம் மகாலிங்கம் பேசினர்.