• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தளபதி 67 படத்தில் விஜயுடன் மோதும் விஷால்

ByA.Tamilselvan

Nov 1, 2022

நடிகர் விஜய் அடுத்த நடிக்க இருக்கும் தளபதி 67 படத்தில் விஜய்க்கு வில்லனாக விஷால் நடிக்க இருப்பதாக மாஸ் அப்டேட் வெளியாகி உள்ளது.
தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படம் உருவாக இருக்கிறது.கமலஹாசனின் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் விஜயை இயக்குவதால், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகவே உள்ளது. இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
ஒட்டுமொத்த திரையுலகும் எதிர்பார்த்து இருக்கும் இப்படத்தில் ஏற்கனவே சில முக்கிய நடிகர்கள் நடிக்க இருப்பதாக தகவல்கள் பரவின. அதன்படி சஞ்சய் தத், பிரித்விராஜ், நிவின் பாலி உள்ளிட்டோரின் பெயர்கள் அடிப்பட்டன. முழுக்க முழுக்க ஆக்சன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் தளபதி 67 படத்தின் வில்லனாக யார் நடிக்கப் போகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதற்கு முதலில் பிரித்திவிராஜ் தேர்வான நிலையில், இப்போது அவர் அந்த படத்தில் இருந்து விலகி விட்டதாகவும், அந்த கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் சங்க தலைவரான விஷால் இடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. தற்போது நடிகர் விஷாலை இப்படத்தில் நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருதாக சில தகவல்கள் காட்டுத்தீ போல் பரவின.
இந்நிலையில் தற்போது ஒரு கேரவன் வேன் அருகில் இயக்குநர் லோகேஷ் நடிகர் விஷாலின் மேனேஜருடன் பேசிக்கொண்டு இருக்கும் வீடியோ செம வைரலாகி வருகிறது. இதனால் தற்போது ரசிகர்கள் விஷால் நடிப்பது உறுதி தான் போல என பேசி வருகின்றனர்.