• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மருதுபாண்டியர் நினைவு தினம்-விருதுநகர் மாவட்ட அதிமுக சார்பாக மாலை அணிவித்து மரியாதை

ByA.Tamilselvan

Oct 27, 2022

இந்திய போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த மருதுபாண்டியர் தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட அதிமுக சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்திய சுதந்திர போராட்டத்தின் முன்னோடிகளான மருது சகோதரர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்திய வீரர்கள். மருது சகோதரர்கள் என்று அழைக்கப்பட்ட மருது பாண்டியர்கள் 1758 முதல் 1801 வரை தங்களது போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்திருந்தனர். ஆனால் ஆங்கிலேயர்கள் இதனை முறியடித்தனர்.
பின்னர் 1801ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ம் தேதி சிவகங்கையின் திருப்பத்தூரில் இவர்கள் தூக்கிலிடப்பட்டனர். இவர்களது நினைவாக காளையார் கோயில் கட்டப்பட்டது.
பின்னர் ஆண்டுதோறும் அக்.27ம் தேதி மருது பாண்டியர் குருபூஜை விழா நடத்தப்படுகிறது. அவர்களின்தியாகத்தை நினைவுகூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அவர்களுக்கு அரசியில் கட்சியினர், பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் சார்பாக மரியாதை செலுத்தப்படுகிறது. அந்தவகையில் விருதுநகர் மாவட்ட அதிமுக சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. விருதுநகர் அதிமுக நகர செயலாளர் முகமது நெய்னார், தகவல் தொழில்நுட்ப அணியின் நகரச் செயலாளர் பாசறை சரவணன் முன்னாள் நகர் மன்ற துணைத் தலைவர் மாரியப்பன் மற்றும் பல அதிமுக நிர்வாகிகள் மருதுபாண்டியர் சிலைக்கு மரியாதை செலுத்தினர் . இந்நிகழச்சியில் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.