• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஒரே நேரத்தில் 2 படங்களை இயக்கும் இயக்குனர் ஷங்கர்

ByA.Tamilselvan

Oct 27, 2022

இயக்குனர் ஷங்கர் ஒரே நேரத்தில் நடிகர் கமல்ஹாசன், ராம்சரண் படத்தை இயக்கி வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்தியன் இந்த படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதைத்தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் நடிகர் ராம் சரண் நடிக்கும் ஆர்.சி.15 படத்தையும் இயக்கி வருகிறார். இந்நிலையில், இந்த மாத இறுதியில் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பை தொடங்கும் ஷங்கர் அடுத்த மாத இறுதியில் படப்பிடிப்பை முடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர், ராம் சரண் படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கவுள்ளதாகவும் அந்த படத்தின் பாடல் காட்சிகள் நியூசிலாந்தில் படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.