• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தீபாவளி பரிசு அளிக்க திட்டமிட்டுள்ள மத்திய அரசு

ByA.Tamilselvan

Oct 19, 2022

2மாநில தேர்தல், மற்றும் தீபாவளி பரிசாக மத்திய அரசு பொட்ரோல் ,டீசல்விலையை குறைக்க முடிவுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீபாவளி பண்டிகையின் போது மத்திய அரசு தீபாவளி பரிசு வழங்கும் வகையில், அதற்கு முந்தைய நாள் இரவு, பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 10 ரூபாயும் குறைத்தது. இந்த ஆண்டு ரஷியா, உக்ரைன் நாடுகளுக்கு இடையில் ஏற்பட்ட போரால், கச்சா எண்ணெய் விலை மிகவும் அதிகரித்தது. இதனால் 137 நாட்களுக்கு பின், மார்ச் 22-ந் தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. பின்னர், தமிழகத்தில் மே 21-ந்தேதி லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய்க்கும், டீசல் 104.77 ரூபாய்க்கும் விற்பனையானது. அன்று, மத்திய அரசு, பெட்ரோல் மீதான கலால் வரியை ரூ. 8, டீசல் மீதான வரியை ரூ.6 குறைத்தது. இதையடுத்து, தமிழகத்தில் பெட்ரோல் விலை, 102.63, டீசல் விலை ரூ.94.24 ஆக குறைந்தன. இதுவரை 150 நாட்கள் முடிவடைந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை மாற்றப்படவில்லை. இமாச்சல் பிரதேசத்தில் அடுத்த மாதமும், பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், இந்தாண்டின் இறுதியிலும் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. எனவே, மத்திய அரசு, வருகிற தீபாவளிக்கு மக்களுக்கு பரிசாக பெட்ரோல், டீசல் விலையை குறைக்க திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.