• Sat. Oct 11th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

தஞ்சாவூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் வேலைவாய்ப்பு..!

Byவிஷா

Oct 13, 2022

தஞ்சாவூர் மாவட்டம் ஊர்க்காவல் படையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட எஸ்பி ரவளி பிரியா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில்..,
தஞ்சாவூர் மாவட்ட ஊர்க்காவல்படை ஆளிநர்கள் பணிக்கு தன்னார்வத்துடன் பணிபுரிய விருப்பமுள்ள தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டையை சேர்ந்த ஆண்கள் மற்றும் பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த பெண்கள் ஆகியோர், விண்ணப்பங்கள் நாளை 14.10.2022 அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தஞ்சாவூர் மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் நேரில் வரவேற்கப்படுகிறது.

காலிப்பணியிடங்கள் : ஆண்கள் – 34, பெண்கள் – 1

தகுதிகள் வயது வரம்பு : 18 -45,
கல்வித்தகுதி : 10ஆம் வகுப்பு தேர்ச்சி
உயரம் : ஆண்கள்- 167 செ.மீ, பெண்கள் – 157 செ.மீ.
மார்பளவு – ஆண்கள் (81- 86) செ.மீ

தேவையான ஆவணங்கள்

  1. கல்விச் சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்.
  2. ஆதார் அட்டை.
  3. பாஸ்போர்ட் அளவு போட்டோ -3
    உடல் தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல்

இடம் : தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானம்.
நாள் : 17.10.2022 – காலை 6 மணி முதல்

  1. ஆண் / பெண் :100 மீட்டர் ஓட்டம்
  2. ஆண் / பெண் : நீளம் தாண்டுதல்