• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பிக்பாஸ் வீட்டில் பிரபல நடிகையின் வருகையால் கலவரம் வெடிக்குமா?

ByA.Tamilselvan

Oct 12, 2022

பிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு என்ட்ரிக்கு பிரபர நடிகையிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் சீசன் 6 பிரபல டிவியில் அக்.9ம் தேதி கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 20 போட்டியாளர்கள் உள்ளே சென்றுள்ளனர்.
ஆரம்பித்த நாளிலேயே கமலை தெரிக்கவிட்ட ஜிபி முத்து பிக்பாஸ் வீட்டை அதகளப்படுத்தி வருகின்றார். தினம் நிகழ்ச்சியினை காண்பதற்கு மக்கள் ஆர்வத்துடன் இருந்து வருகின்றனர்.உள்ளே சென்றிருக்கும் போட்டியாளர்கள் மக்களுக்கு அவ்வளவாக அறிமுகமில்லாதவர்களாக இருந்தாலும், ஜிபி முத்துவால் முதல் நாளிலிருந்தே நிகழ்ச்சி கலைகட்டத் தொடங்கியுள்ளது.இந்நிலையில் தற்போது வைல்ட் கார்டு என்ட்ரிக்கு பிரபல நடிகை கிரணிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக அவருக்கு பெரும் தொகை பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எதையும் நேர்க்கு நேர் பேசும் குணம் கொண்ட கிரண் வருகையால் பிக்பாஸ்வீட்டில் கலவரம் வெடிக்குமா என எதிர்பார்ப்பில் பிக்பாஸ் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.