• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

36 செயற்கைகோள்களை ஏவுகிறது இஸ்ரோ

ByA.Tamilselvan

Oct 7, 2022

இந்த மாதம் 36 செயற்கைகோள்களை எல்விஎம் 3 ஏவுகணை மூலம் விண்ணில் செலுத்த உள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இந்த மாதம் 3வது அல்லது 4வது வாரத்தில் 36 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்துவதற்காக ஜியோசின்க்ரோனஸ் செயற்கைகோள் தயார் நிலையில் உள்ளது. இது வெற்றிகரமாக சோதனைக்கு உள்படுத்தப்பட்டது.
நியூஸ்பேஸ் இந்தியா மற்றும் ஒன்வெப் நிறுவனங்களுடன் இரண்டு ஒப்பந்தங்களில் இஸ்ரோ கையெழுத்திட்டுள்ளது. முதல் வணிக ரீதியான ஏவுதலில் இதுதான் முதல்முறை. 6 டன் எடையுள்ள பேலட் செயற்கைகோள்களை சுற்றுப் பாதையில் வைக்க முதல் முறையாக இந்திய ராக்கெட்டை இஸ்ரோ பயன்படுத்துகின்றது. தகவல் தொடர்பு வசதிக்காக 650 செயற்கைகோள்களை கொண்ட தொகுப்பை உருவாக்கும் திட்டத்தின் ஒருபகுதியாக இந்த36 செயற்கைகோள்கள் ஏவப்படுகிறது.