• Fri. Mar 29th, 2024

பெண்களுக்கு சிறுதொழில் கைக்கொடுக்கிறதா..??

Byகாயத்ரி

Oct 7, 2022

இக்காலகட்டத்தில் பெண்களுக்கு சுயதொழில் என்பது வருமானம் ஈட்டும் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. அதிலும் பெண்கள் பல துறையில் வேலைக்கு சென்று சாதிப்பது ஒரு பக்கம் என்றால் வீட்டிலிருந்தபடியே சத்தமில்லாமல் சாதிக்கும் பெண்கள் மறுபக்கம். சிறு குறு தொழில் செய்யும் பெண்களின் சதவீதம் தற்போது அதிகரித்துள்ளது. அந்த வகையில் சிறுதொழிலின் கீழ் வரும், ஆரி வொர்க் பிளவுஸ் டிசைனர் திருமதி. வாசுகி தேவி நம்மிடம் இந்த சிறுதொழில் பற்றி சில கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.இதோ உங்களுக்காக…

வாசுகி தேவி

பெண்களுக்கான சிறுதொழிலில் ஆரி வொர்க்(Aari work) என்ன பங்கு வகிக்கிறது..??

பெண்கள் வெளியில் சென்று வேலை பார்த்துவிட்டு வீட்டிலும் வேலை செய்வது மிகவும் கடினமான ஒன்று. அதனால் வீட்டில் இருந்தபடியே சிறுதொழில் செய்து வந்தால் வீட்டையும் கவனத்துக்கொள்ள முடியும், வருமானமும் ஈட்ட முடியும். அந்த வகையில் ஆரி வொர்க் வீட்டிலிருந்து செய்ய தக்க வேலை..

ஆரி வொர்க்-ல் பணம் ஈட்ட முடிகிறதா..??

ஆரி வொர்க்-ல் நாம் எதிர்பார்பதை விட அதிமாகவே லாபம் ஈட்டலாம்…ஆனால் அதற்கு நேரம் செலவிடுதல் கொஞ்சம் தேவை, அதுமட்டுமின்றி கடின உழைப்பு மிகவும் அவசியம். நேரம் தான் இந்த தொழலின் முக்கிய பங்கு. ஒரு பிளவுஸ் வொர்க் செய்தால் நாம் போட்ட பணத்தை எடுத்துவிடலாம்.

சிறுதொழில் செய்யும் பெண்களுக்கு அது கைக்கொடுக்குமா…??

பெண்கள் செய்யும் புடவை வியாபாரம், அழகு நிலையம், டெய்லரிங், ஆரி வொர்க் இவை எல்லாமே அத்தியாவசியம். அதனால் கண்டிப்பாக இது நல்ல வருமானத்தை ஏற்படுத்தி தரும். ஒரே இடத்திலே எல்லாம் கிடைத்தால் போதும் என்று வாடிக்கையாளர்கள் விரும்புவார்கள். அது சிறுதொழில் செய்யும் பெண்களுக்கு சிறந்த வாய்ப்பு தான்..

Material வாங்கி முதலீடு செய்தால்.. முதலீடு பணம் கைக்கு வருகிறதா..?

ஆரி வொர்க் பொறுத்தவரை மொத்த விலை கடைகளில் தேவையான பொருட்களை வாங்கினால் முதலீட்டை விடவே அதிக வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு. தனித்தனியாக பொருட்களை வாங்கும் போது நமக்கு நஷ்டம் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். ஆக, மொத்த விலைகடையை தேர்ந்தெடுப்பது நல்லது..

சிறுதொழில் செய்பவர்களுக்கு நீங்கள் சொல்லும் டிப்ஸ்..

எந்த சிறுதொழிலாக இருந்தாலும் உங்களின் நேரம் முக்கியமானது. நேரம் தவறாமை சிறுதொழிலில் அவசியம். சொன்ன நேரத்தில் வேலையை முடித்து கொடுத்தால் வாடிக்கையாளர்கள் நம்மை தொடர்வர். பெண்களுக்கு இந்த சிறுதொழில் வரப்பிரசாதம் தான். அதை கைவிடாமல் செய்தால் தன்னிச்சையாக உங்கள் கைமேல் வருமானம் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *