• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ரூ.1000 கோடி சம்பளம்

ByA.Tamilselvan

Sep 29, 2022

பிக்பாஸ் 16ஆவது சீசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க பாலிவுட் நடிகர் சல்மான்கான் ரூ.1,000 கோடி சம்பளம் கேட்டதாக தகவல் பரவிய நிலையில், அதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியில் மட்டும் 15 சீசன்களை கடந்துள்ளது. அந்நிகழ்ச்சியை பாலிவுட் நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கினார். முந்தைய சீசன்களை போலவே 16ஆவது பிக்பாஸ் இந்தி நிகழ்ச்சியையும் சல்மான்கானே தொகுத்து வழங்குகிறார். ஏற்கனவே ரூ.250 கோடி சம்பளம் பெற்ற சல்மான்கான் பிக்பாஸ் 16ஆவது சீசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ரூ.1,000 கோடி சம்பளம் கேட்டதாகவும், அந்த தொகையை கொடுக்க நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் சம்மதித்து இருப்பதாகவும் வலைத்தளத்தில் தகவல் பரவியது.
இந்நிலையில் இணையத்தில் பரவிய தகவலுக்கு நடிகர் சல்மான்கான் விளக்கம் அளித்துள்ளார். அதில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக கொடுக்கப்படும் சம்பளம் குறித்து வெளியான தகவல் உண்மை இல்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ரூ.1,000 கோடி சம்பளம் கிடைத்தால் இனிமேல் வேலை செய்ய வேண்டிய நிலைமை இருக்காது என்று கூறியுள்ளார். சில நேரங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டேன் என்று தெரிவித்தும், வேறு ஆள் கிடைக்காமல் தாமே தொகுத்து வழங்க வேண்டி உள்ளதாகவும் அவர் கூறினார்.