• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

புதுச்சேரியில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பு…

Byகாயத்ரி

Sep 26, 2022

புதுச்சேரியில் காய்ச்சல் காரணமாக குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 17ஆம் தேதி முதல் நேற்று வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

புதுச்சேரியில் காய்ச்சல் குறையாமல் பரவி வந்த நிலையில், பன்றி காய்ச்சல் பாதிப்பும் இருந்து வந்தது. இதன் காரணமாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படித்து வந்த மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு வாரத்திற்கு பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்படுகிறது. வைரஸ் காய்ச்சால் பரவல் காரணமாக 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. வைரஸ் காய்ச்சல் பாதிப்பு படிப்படியாக குறைந்துவரும் நிலையில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் திட்டமிட்டபடி காலாண்டு தேர்வு இன்று முதல் தொடங்கும் என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். வரும் 30ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் நிலையில் அதன் பிறகு ஒரு வார விடுமுறை அளிக்கப்பட்டு, அக்டோபர் 6ம் தேதி இரண்டாம் பருவத்திற்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.