• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!!! வைரல் கார்ட்டூன்

ByA.Tamilselvan

Sep 26, 2022

இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதை விளக்கும் கார்ட்டூன் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் சரிவைக் கண்டுள்ளது.வாரத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குச்சந்தை வர்த்தகத்தை தொடங்கியது முதல் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது. வர்த்தகம் தொடங்கியது முதல் சந்தையில் முதலீடுகள் வெளியேற்றம், முதலீடுகளை டாலருக்கு மாற்றுதல், கச்சா எண்ணெய் விலை, உக்ரைன் – ரஷியா போர் உள்பட பல காரணங்கள் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவை சந்தித்துள்ளது.
பங்குச்சந்தையில் இன்று வர்த்தகம் தொடங்கியதுமே அமெரிக்க டாலருக்கு இந்திய ரூபாயின் மதிப்பு 81.47 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில் நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிவிங்கிகளால் கூட ரூபாய் வீழ்ச்சியின் வேகத்தை மிஞ்ச முடியவில்லை என்பதாக சித்தரிக்கும் இந்த கார்ட்டூன் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.