• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மருந்து கழிவுகளை திறந்தவெளியில் கொட்டப்படுவதற்கு எதிர்ப்பு

ByM.maniraj

Sep 21, 2022

கழுகுமலை பகுதியில் திறந்தவெளியில் மருத்துவ கழிவுகளை திறந்தவெளியில் கொட்டி எரிக்கபடுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு
கழுகுமலை – சங்கரன்கோவில் சாலையில் அமைந்துள்ள இஎஸ்ஐ மருத்துவமனையின் மருந்து கழிவுகள் மற்றும் அட்டை பெட்டிகள் அனைத்தும் மருத்துவமனை அருகிலேயே திறந்த வெளி பகுதியில் கொட்டப்பட்டு தீயிட்டு எரிக்க படுகிறது. இதில் வரும் நச்சு புகையால் அருகில் உள்ள குடியிருப்புகளில் வசித்து வரும் சிறுவர், சிறுமியர் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்பட்டு வருவதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த புகையினை சுவாசிக்கும் பொதுமக்களுக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது.

எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயி காளி ராஜ் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரதுறைக்கு மனுக்கள் அனுப்ப பட்டு உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.