• Tue. Apr 30th, 2024

திமுக அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர்… முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அதிரடி பேச்சு!

Byகாயத்ரி

Sep 16, 2022

மின்கட்டணம், சொத்து வரி உட்பட அனைத்து வரிகளையும் உயர்த்திய திமுக அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர் என்றும் எப்போது தேர்தல் அறிவித்தாலும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க மக்கள் தயாராகி விட்டனர் என்றும்
சிவகாசியில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள்விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.

விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பிலும் சிவகாசி சட்டமன்ற தொகுதி கழகம் சார்பிலும் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 114 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சிவகாசி பாவடிதோப்பு திடலில் நடைபெற்றது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி. ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். சிவகாசி கூட்டுறவு பண்டகசாலை தலைவர் கே.ஏ.ஏ. அசன்பதுருதீன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பிலிப்வாசு, மாவட்ட பொருளாளர் தேன்ராஜன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சுபாஷினி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முத்துப்பாண்டியன் முன்னிலை வகித்தனர். சிவகாசி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, சிவகாசி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஆரோக்கியராஜ், சிவகாசி தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ், திருத்தங்கல் மேற்கு பகுதி கழகச் செயலாளர் சரவணகுமார், திருத்தங்கல் கிழக்கு பகுதி கழக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சிவகாசி மேற்கு பகுதி கழகச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன், சிவகாசி கிழக்கு பகுதி கழகச் செயலாளர் சாம் (எ) அபினேஸ்வரன், திருத்தங்கல் கூட்டுறவு வங்கி தலைவர் ரமணா, சிவகாசி மாமன்ற உறுப்பினர் கரைமுருகன் வரவேற்புரை ஆற்றினர்.

சிறப்பு அழைப்பாளர்களாக கழக அமைப்புச் செயலாளரும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி, கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நடிகை விந்தியா, தலைமைக் கழக பேச்சாளர்கள் சின்னத்தம்பி, சம்ஸ்கனி, தீக்கணல் லட்சுமணன், சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர் ராஜவர்மன், ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா, கழக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் வேண்டுராயபுரம் சுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினர்.

பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பேசும்போது..,

கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனைகிணங்க பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சிவகாசியில் நடைபெறுகின்றது. பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழக முதல்வராக இருந்தபோது உடல்நிலை சரியில்லாமல் அமெரிக்காவில் சிகிச்சை எடுத்துக்கொண்டார். அந்த மருத்துவ செலவு யார் செய்தார்கள் என்று சட்டமன்ற கூட்டத்தொடரில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். எனது சிகிச்சை செலவை அரசும் ஏற்கவில்லை, எனது கட்சியும் ஏற்கவில்லை என்றும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தான் செலவு செய்தார்கள் என்று அண்ணா பதில் கூறினார். அண்ணா அவர்களின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட ஆணையிட்டவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள். ஆகவே அண்ணா பிறந்த நாளை இன்றளவும் அண்ணா திமுக கொண்டாடி வருகின்றது. ஏழை மக்களுக்காக எத்தனையோ உதவிகளை செய்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா அவர்கள். விருதுநகர் மாவட்டத்தில் 7 தொகுதிகளிலும் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெறுகின்றது. திமுக ஆட்சியின் அவல நிலையை எடுத்துக் கூறும் வகையில் இந்த பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. புரட்சித்தலைவி அம்மா இருக்கும் வரை பயந்து நடுங்கி இருந்த திமுக இன்று பயமின்றி எல்லா தவறுகளையும் செய்கின்றனர். மது பிரியர்கள் இவர்களின் துன்பம் தாங்க முடியாமல் வேற வழியின்றி டாஸ்மாக் கடைக்கு சென்று சரக்கு வாங்கி சாப்பிட்டால் அந்த சரக்கும் போதை ஏற மாட்டேங்குது என்றும் போலியாக மதுவை விற்கின்றனர் என்றும் புலம்புகின்றனர். டாஸ்மாக் கடையில் டுப்ளிகேட் சரக்கைதான் விற்கின்றனர். ஒரிஜினல் சரக்கு டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யவில்லை. தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் எட்டு ஆண்டுகளாக மின் கட்டணம், சொத்து வரி எதுவுமே உயர்த்தப்படவில்லை .தற்போது நடைபெறும் திமுக ஆட்சியில் நடந்தால் வரி, உட்கார்ந்தால் வரி, நின்றால் வரி என எதற்கெடுத்தாலும் வரி போடுகின்றனர். வரிகளை அனைத்தையும் கூட்டிவிட்டனர். கரண்ட் பில் இந்த மாதம் 5 ஆயிரம் ரூபாய் கட்டி இருப்போம் அடுத்த மாதம் 10 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டி வரும். மின்சார கட்டண உயர்வால் ஒவ்வொரு குடும்பமும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களை பற்றி கவலைப்படாமல் தினமும் சூட்டிங் நடத்துகிற வேலையில்தான் பிஸியாக உள்ளார். திமுக ஆட்சியில் மக்கள் திட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக தாலிக்கு தங்கம் திட்டம் மூலம் ஏழை எளிய மக்கள் பயனடைந்தனர். அதிமுக அரசில் செயல்படுத்தப்பட்ட மக்கள் திட்டங்கள் அனைத்தையும் ஸ்டாலின் நிறுத்திவிட்டார். சிவகாசி தொழில் அதிபர்களிடம் விசாரித்துப் பார்த்தாலே திமுக அரசின் அவலங்களை தெரிந்து கொள்ள முடியும். நம்ம ஊரு இப்பம் ரெம்ப கெட்டுப் போச்சு அண்ணன் என்று பாடலைத் தான் அவர்கள் பாடுவார்கள். திமுக ஆட்சியில் சிவகாசியில் எல்லா தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பட்டாசு ஆலைகளில் அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டுள்ளதால் பட்டாசு தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தீப்பெட்டி காண ஜிஎஸ்டி வரியை எனது கோரிக்கையை ஏற்று அப்போதைய முதல்வர் எடப்பாடிபழனிச்சாமியின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு குறைத்தது. தீப்பெட்டிக்கான 18 சதவீத ஜிஎஸ்டி வரியை 12 சதவீதமாக மத்திய அரசு குறைத்தது. பட்டாசு தொழிலுக்கு 28% இருந்தது எனது முயற்சியால் அப்போதே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முயற்சியால் பட்டாசுக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் சிவகாசியில் தொழில்கள் அனைத்தையும் பாதுகாக்க உறுதுணையாக இருந்தோம். இப்போது எல்லா தொழிலும் முடங்கி விட்டது. சிவகாசியில் பட்டாசு தொழிலை சாராயக்கடை போன்று ஒளிந்து, ஒளிந்து பயந்து பயந்து செய்ய வேண்டிய நிலைமைக்கு திமுக கொண்டு சென்றுவிட்டது. திமுக ஆட்சியில் பட்டாசு தொழிலாளர்களுக்கும் தொழிலுக்கும் தீப்பெட்டி தொழிலாளருக்கும் தொழிலுக்கும் எந்தவித பாதுகாப்பும் இல்லை. விடியல் வருது விடியல் வருது என்று கூறி மக்களை ஏமாற்றி திமுக ஆட்சியைப் பிடித்துள்ளது ஸ்டாலின் தான் வராரு விடியல் தரப் போறார் என்று பாடலைப் போட்டு ஓட்டு வாங்கி மக்களை ஏமாற்றி விட்டனர் தமிழகத்தில் அரசு பஸ்கள் அனைத்தும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது கூட வாங்க ஸ்பேர் பார்ட்ஸ் கூட வாங்க முடியாத நிலையில் திமுக அரசு உள்ளது பிரியாணி கடைக்கு சென்று சாப்பிடும் திமுகவினர் காசு கேட்டால் கடை உரிமையாளர்களை தாக்குகின்றனர் இந்த திமுக ஆட்சியில் ஏம்எல்ஏக்களையும் பார்க்க முடியவில்லை, எம்பி களையும் பார்க்க முடியவில்லை. முதலமைச்சரை சுற்றி ஐந்து பேர் கொண்ட அதிகார மையம் சுற்றிக் கொண்டிருக்கின்றது. அவர்கள் சொல்வதைத்தான் கேட்க வேண்டிய சூழ்நிலையில் தமிழக முதல்வர் அவர்கள் உள்ளார். திமுக ஆட்சி மக்களுக்கான ஆட்சி இல்லை. அம்மா பரிசு பெட்டகம், கிடுகிடுப்பை, இடுப்பு லேகியம், தாலிக்கு தங்கம், பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் பிறக்கின்ற குழந்தை முதல் இறக்கின்ற முதியவர்கள் வரை திட்டங்களை அதிமுக ஆட்சியில் வாரி வாரி வழங்கினோம். அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட முதியோர் பென்சன்னை எல்லாம் தற்போது ரத்து செய்துவிட்டனர். இந்த நிலை எல்லாம் மாற வேண்டும். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் சேர்ந்து வர வாய்ப்புள்ளது. எப்போது தேர்தல் வந்தாலும் அண்ணா திமுகவிற்கு இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு போடுவதற்கு மக்கள் தயாராகி விட்டனர் இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டுப்போட மக்கள். வெறித்தனமாக உள்ளனர். திமுக மேல் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அண்ணா திமுக வேட்பாளர் பட்டியலை அறிவித்தாலே போதும் இரட்டை இலைக்கு ஓட்டு போட மக்கள் தயாராக உள்ளனர். சிவகாசி சட்டமன்ற தொகுதியில் நான் வாங்கி கொடுத்த நிதியில்தான் தற்போது சாலை, வாறுகால் அமைக்கின்றனர். சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு ஒரு நிதியும் வரவில்லை. இதே நிலைதான் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் உள்ளது. திமுகவை மக்கள் வெறுக்கின்றனர். திமுக ஆட்சியை வெறுக்கின்றனர். அண்ணா திமுக ஆட்சி மக்களுக்கான ஆட்சி புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கட்டிக்காத்த இந்த இயக்கம் ஆள வேண்டும் என்று சொன்னால் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று பேசினார்.

பொதுக்கூட்டத்தில் திரைப்பட நடிகை விந்தியா பேசும் போது..,

தீபாவளி என்ற ஒத்த திருவிழாவிற்காக ஆண்டு முழுவதும் உழைக்கும் தொழிலாளர் நிறைந்த பகுதி சிவகாசி. கடந்த பத்து ஆண்டுகால அதிமுக ஆட்சியின் சாதனைகளை விட கடந்த ஒன்றை ஆண்டுகளாக திமுக ஆட்சியில் நடைபெற்ற சோதனைகள் ஏராளமாக உள்ளது. அண்ணா பேரைச் சொல்லி அரசியல் வியாபாரம் பார்க்கும் திமுகவின் செயலை மக்கள் ரசிக்கவில்லை. அண்ணாவின் கொள்கைகளை வைத்துக்கொண்டு மக்களுக்கு நல்லாட்சி வழங்கியது அதிமுக தான். தேர்தல் சமயத்தில் சட்டமன்றத் தேர்தலின்போது திமுக ஏராளமான வாக்குறுதிக கொடுத்தது மின் கட்டணத்தை கூட்டுவோம், சொத்து வரியை கூட்டுவோம், வீட்டு வரியை கூட்டுவோம் என்று அப்போதே இவர்கள் சொல்லி இருக்கலாம். அப்போதெல்லாம் சொல்லாமல் தற்போது கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றாமல் பொதுமக்களை பாதிக்கும் வரிகளை உயர்த்தி உள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி நீங்கள் தற்காலிக பொதுச்செயலாளர் என்று ஸ்டாலின் விமர்சிக்கின்றார். இதே எடப்பாடி பழனிச்சாமி வீட்டுக்குதான் குடும்பத்தோடு சென்று மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கேட்டு காத்துக் கிடந்தார்கள். எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதல்வராக இருந்த போது நல்லாட்சியை நடத்தினார் .மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தினார். கொரோனா காலங்களில் ஏழை, ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் நிதி வழங்கினார். பொங்கலுக்கு பரிசு தொகுப்பு வழங்கினார். பெண்களுக்கு பாதுகாப்பு கொடுத்தார். ஆனால் தற்போது திமுக ஆட்சியில் வாக்களித்த மக்களுக்கு சாக் கொடுத்து வருகின்றனர். திராவிட மாடல அரசு, சிக்சர் அரசு, பேரரசு என்று இஷ்டத்திற்கு பெயர் வைத்துக் கொள்கின்றனர். திட்டம் போட்டு திருடியது கருணாநிதி என்றால் திட்டங்களுக்கு பெயர் வைத்தே திருடுகின்றார் மு.க.ஸ்டாலின். கேட்டால் இது விடியல் அரசு என்று கூறுகின்றார். நான்கு வருடத்திற்கு முன்பு மோடி தமிழக வந்தபோது கருப்பு சட்டை காண்பித்து ஸ்டாலின் எதிர்ப்பை தெரிவித்தார். இப்போது அதே மோடி சென்னை வரும்போது சரவணா ஸ்டோர் ஓனர் போன்று சந்தன கலரில் பட்டுச்சட்டை வேஸ்ட் உடுத்தி அவர் பக்கத்தில் பவ்வியமாக கையை கட்டி நிற்கின்றார். ஆட்சியை காப்பாற்றுகின்ற பயம் ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ளது. திமுகவுக்கு ஓட்டு போட்ட மக்களின் நினைத்தால் மிகவும் பரிதாபமாக உள்ளது .ஸ்டாலினுக்கும் ஸ்டாலின் குடும்பத்திற்கு மட்டுமே விடிந்துள்ளது. ஓட்டு போட்ட மக்களுக்கு இன்னும் விடியல் ஏற்படவில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செங்கலை வைத்து நக்கல் செய்த உதயாநிதி ஸ்டாலின் தற்போது எங்கே இருக்கின்றார். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை விலைவாசி உயர்ந்திடுச்சு என்று கூறிய கனிமொழி தற்போது எங்கே இருக்கின்றார். திமுக என்ன செய்தாலும் கும்மி அடித்துக் கொண்டு ஜால்ரா அடித்துக் கொண்டு இருந்த கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் தற்போது எங்கே உள்ளனர். தற்போது வரிகள் அனைத்தையும் உயர்த்தி விட்டனர். கொடுத்த வாக்குறுதி எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. எடப்பாடி பழனிச்சாமி தவிர இந்த அரசியல் கட்சித் தலைவர்கள் திமுக அரசுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவிக்க மறுக்கின்றனர். எதிர்த்து பேச மறுக்கின்றனர். ஏனென்றால் அவர்களுக்கு நாட்டைப் பற்றிய நாட்டு மக்களைப் பற்றியோ சிந்தனை கிடையாது. அவர்கள் ஒவ்வொருவரும் வீட்டை பற்றி தான் கவலைப்படுகின்றனர். இதே மேடையில் திமுகவிற்கு 40 கேள்விகளை நான் கேட்டுள்ளேன். இதில் ஒரு கேள்விக்காவது திமுகவினர் பதில் கூறட்டும். ஏனென்றால் அவர்களிடம் பதிலே கிடையாது ந்த வயதிலும் ஸ்டாலின் பாயில் தான் தூங்குகின்றார் என்று திமுக தலைவர்கள் கூறுகின்றனர். அவர் ஏன் பாயில் படுகின்றார் என்பது தெரியுமா. எந்திரித்தவுடன் எதையாவது அவர்கள் சுருட்டனும் அதற்குத்தான் அவர்கள் பாயில் படுகின்றனர். பஞ்சத்துக்கு திருடர்களை கூட ஏற்றுக் கொள்ளலாம். பரம்பரை திருடுறவன் எப்படி திருந்துவான். மக்களுக்கும் மனசாட்சிக்கும் பயப்படாமல் போலியான வாக்குறுதிகளை கொடுத்து திமுக ஆட்சியை பிடித்துள்ளது. ஏமாத்தி பிடிக்கின்ற ஆட்சி பெருமை கிடையாது. தேர்தல் எப்போது வந்தாலும் பொதுமக்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் விஜய்ஆனந்த், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.கே.பாண்டியன், விருதுநகர் கிழக்கு மாவட்ட மகளிரணி செயலாளா் கலைச்செல்வி, மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் திருமுருகன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் மாரிஸ்குமார், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் ஆனந்தகுமார், சிவகாசி ஒன்றிய கவுன்சிலர்கள் சுடர்வள்ளி சசிகுமார், ஜெகத்சிங் பிரபு, சிவகாசி ஒன்றிய கழக பொருளாளர் கருப்பசாமிபாண்டியன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாண்டியராஜன், தலைவர் எம்.கே.என்.செல்வம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் பாலபாலாஜி, விஸ்வநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ், தேவர்குளம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துவள்ளிமச்சக்காளை, மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் சுப்புக்காளை, மாவட்ட இளைஞர் மற்றும் இளைஞர் பாசறை துணைச் செயலாளர் சிங்கராஜ், சிவகாசி மேற்கு ஒன்றிய மாணவர் அணிச் செயலாளர் தனுஷ், சிவகாசி நகர இளைஞரணி செயலாளர் கார்த்திக், திருத்தங்கல் நகர அவைத்தலைவர் கோவில்பிள்ளை, வெம்பக்கோட்டை முன்னாள் ஒன்றிய கழகச் செயலாளர்கள் ராம்ராஜ்பாண்டியன், எதிர்கோட்டை மணிகண்டன் உட்பட ஒன்றிய கழக, பகுதி கழக, வட்டக் கழக கிளைக் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம் சிவகாசி சட்டமன்ற தொகுதி கழக நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். சிவகாசி மேற்கு பகுதி கழகச் செயலாளர் கருப்பசாமிபாண்டியன், சிவகாசி கிழக்கு பகுதி கழகச் செயலாளர் சாம் (எ) அபினேஸ்வரன், கழகப் பொதுக்குழு உறுப்பினர் பாலாஜி நன்றி கூறினர்.

படம் விளக்கம், சிவகாசியில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணாவின் 114வது பிறந்த நாள்விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார். நடிகை விந்தியா மற்றும் கட்சி நிர்வாகிகள் அருகில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *