• Fri. Jul 24th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த இன்ஃபோசிஸ் நிறுவனம்…

Byகாயத்ரி

Sep 14, 2022

ஒரே நேரத்தில் இரண்டு வேலை செய்யும் தங்களது நிறுவன ஊழியர்களுக்கு இன்ஃபோசிஸ் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டில் இருந்து வேலை செய்யும் நடைமுறையை இன்போசிஸ் நிறுவனம் அமல்படுத்தியது. இதனை பயன்படுத்தி ஊழியர்கள் பகலில் ஒரு நிறுவனத்திலும் இரவில் ஒரு நிறுவனத்திலும் வேலை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்த புகார்கள் வந்தவுடன் இன்ஃபோசிஸ் நிறுவனம் தற்போது தங்களது ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையைப் சாதகமாக பயன்படுத்தி ஊழியர்கள் ஒரே நேரத்தில் இரண்டு நிறுவனங்களுக்கு வேலை செய்தாலோ அல்லது வேலை நேரத்திற்கு பின் மற்றொரு நிறுவனத்திற்கு வேலை பார்த்தாலோ உடனடியாக பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று அறிவித்துள்ளது.