• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மருத்துவக் கலந்தாய்வில் புதிய நடைமுறை அறிமுகம்!!

ByA.Tamilselvan

Sep 9, 2022

மருத்துவக் கலந்தாய்வுக்கு புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் யு.ஜி தேர்வு நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் உள்ள 35 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 5,050 இடங்களில் 15% அகில இந்திய ஒதுக்கீடுக்கு 757 இடங்கள் ஒதுக்கப்பட்ட பின், மீதமுள்ள 4,293 இடங்களுக்கும், இதர தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும் மருத்துவக் கல்வி இயக்குநரகம் கலந்தாய்வை நடத்த உள்ளது.
மருத்துவக் கலந்தாய்வுக்கான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும். மாணவர்கள் அடுத்த வாரம் முதல் கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்.முதலில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெற்ற பின், மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு தொடங்கும்.நடப்பு ஆண்டில் மருத்துவக் கலந்தாய்வுக்கு புதிய நடைமுறையை மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி, மருத்துவக் கலந்தாய்வின்போதே, இடங்கள் ஒதுக்கப்பட்ட பின் மாணவர்கள் தேர்வுக் குழுவிடம் ஓராண்டுக்கான கல்விக் கட்டணத்தை செலுத்த வேண்டும்.இதன் மூலம், கலந்தாய்வு முடிந்து மாணவர்கள் கல்லூரிகளுக்கு நேரில் செல்லும்போது கூடுதல் கட்டணம் வசூலிப்பதோ, சேர்க்கையை மறுப்பதோ முற்றிலும் தடுக்கப்படும்.
மாணவர்கள் செலுத்திய கல்விக் கட்டணத்தை சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு தேர்வுக் குழுவே பின்னர் விடுவிக்கும்’ என்று அதில் தெரிவித்துள்ளது.