• Mon. Oct 20th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் விழா… தனுஷ் குமார் எம்பி துவக்கி வைத்தார்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலை முதலாமாண்டு பயிலும் மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.
தமிழக அரசின் சார்பில் மேல்நிலை முதலாம் ஆண்டு பயிலும் மாணவ மாணவிகளுக்கு தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் இலவச மிதிவண்டி வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியினை சென்னையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழகமெங்கும் அனைத்து பள்ளிகளிலும் மிதிவண்டி வழங்கும் விழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது அதனடிப்படையில் கடையநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் டாக்டர் செல்லத்துரை தலைமை தாங்கினார். நகரக் கழக செயலாளர் அப்பாஸ் ஒன்றிய செயலாளர் சுரேஷ் முன்னாள் நகர் மன்ற தலைவர் டாக்டர் சஞ்சீவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியை ஜின்னி இவாஞ்சலின் ஜோஸ் வரவேற்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார் மாணவிகளுக்கு இலவச மிதிவண்டியை வழங்கினார்.


இதற்கிடையே பள்ளியின் முன்பக்கமாக வளாக சுவரையொட்டிஓரமாக செல்லும் கழிவு நீர் ஓடையால் மாணவிகளுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது என்பதை கருத்தில் கொண்டு கழிவு நீர் வாறுகாலை சுத்தம் செய்வதோடு மட்டுமின்றி சிலாப் போட்டு மூட வேண்டும் என நகராட்சி ஆணையரிடம் நகரச் செயலாளர் அப்பாஸ் கோரிக்கை விடுத்துள்ளார் மேலும் பள்ளியின் தென்புறத்தில் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களால் மாணவிகளுக்கு மிகுந்த இடையூறு ஏற்படுகிறது அந்த இடங்களில் போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும் என்றும் நகர செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார்
நிகழ்ச்சியில் கடையநல்லூர் நகர் மன்ற துணைத் தலைவர் ராசையா வார்டு செயலாளர் காளிமுத்து நகர மன்ற உறுப்பினர்கள் சிட்டி திவான் மைதீன் கண்ணன் முகைதீன் கனி முருகன் மாலதி தனலட்சுமி மற்றும் துணைச் செயலாளர் காசி அவை தலைவர் முருகையா பொருளாளர் மாவடிக்கால் நெடுமாறன் மாவட்ட பிரதிநிதிகள் தம்புராஜ் ராமச்சந்திரன் ஒன்றிய குழு தலைவர் பால்ராஜ் சுப்பம்மாள் துணைத் தலைவர் ஐவேந்திரன் தினேஷ் கனகு முருகானந்தம் கருப்பண்ணன் மற்றும் புதூர் சீதாராமன் வடகரை பேரூராட்சி தலைவர் ஷேக் தாவுது மற்றும் பலர் கலந்து கொண்டனர்.