• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஆண்டிபட்டியில் அஜித் ரசிகர் மன்றம் சார்பில் வ.உ.சி பிறந்தநாள் விழா.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் சுதந்திர போராட்ட வீரர், செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனாரின் 151 வது பிறந்தநாள் விழாவை நடிகர் அஜித்குமார் ரசிகர் மன்றம் சார்பில் சிறப்பாக கொண்டாடினார்கள். விழாவை முன்னிட்டு ரசிகர் மன்ற ஒன்றிய செயலாளர் காசிராஜன் தலைமையில், இளைஞர் மன்ற செயலாளர் வேலவர் கண்ணன், நிர்வாகிகள் ஈஸ்வரன், குரு பாலா ஆகியோர் முன்னிலையில் ரசிகர்கள் ஜோதி ஏந்தி ஊர்வலமாக வந்து ,ஆண்டிபட்டி பால விநாயகர் கோவில் அருகே அமைக்கப்பட்டு இருந்த வ.உ.சிதம்பரனாரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வணங்கினார்கள்.