• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் மீண்டும் தொடர வேண்டும்.. நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!!

Byகாயத்ரி

Sep 5, 2022

வ.உ. சிதம்பரனாரின் 151-வது பிறந்த நாளை முன்னிட்டு நெல்லையில் அவரது திருவுருவ சிலைக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் குறித்த கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது தாலிக்கு தங்கம் திட்டம் அனைத்து பெண்களின் வாழ்க்கையிலும் முக்கியமான திட்டமாக இருந்தது. இத்திட்டம் பெண்களுக்கு திருமணத்தின் போது, மிகவும் உதவியாக இருந்தது. இத்திட்டத்தை எடுத்தது மிகவும் வருத்தத்திற்குரிய ஒன்று. எனவே மீண்டும் தாலிக்கு தங்கம் திட்டத்தை கண்டிப்பாக தொடர வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் டெல்லி முதலமைச்சர் வருகை குறித்து பேசிய அவர், டெல்லியில் கெஜ்ரிவால் இருக்கலாம். தமிழ்நாட்டில் மக்கள் முடிவு என்பது வேறு விஷயம். யார் எந்த கூட்டணி வைத்தாலும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளார்.