• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

அரசு ஆம்னி பேருந்துகளில் இனி ஆன்லைன் புக்கிங்கில் 10% தள்ளுபடி!!!

Byகாயத்ரி

Sep 5, 2022

தமிழ்நாடு மாவட்டங்கள் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களின் முக்கிய நகரங்களும் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் விரைவு பேருந்துகள் செயல்பட்டு வருகின்றன. மொத்தம் 251 வழித்தடங்களில் விரைவு பேருந்துகள் மற்றும் குளிர்சாதன விரைவு பேருந்துகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மற்ற ஆம்னி பேருந்துகள் மற்றும் ரயில்களில் பயணிப்போரையும் ஈர்க்கும் விதமாக முன்பதிவு செய்பவர்களுக்கு சில சலுகைகளை அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதன்படி ஆன்லைன் மூலமாக இருவருக்கு டிக்கெட் புக்கிங் செய்தால் 10 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும் என்றும், அதேபோல சொந்த ஊர்களுக்கு அல்லது வெளியூர்களுக்கு செல்வதற்கும், திரும்ப வருவதற்கும் ஆன்லைனில் புக்கிங் செய்தால் திரும்பி வருவதற்கான டிக்கெட் கட்டணத்தில் 10% தள்ளுபடி அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த சலுகைகள் விழாக்கால புக்கிங் சமயத்தில் மட்டும் அமலில் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.