• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

17ஆம் நூற்றாண்டின் வாம்பயர் எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு…

Byகாயத்ரி

Sep 5, 2022

17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண் வாம்பயரின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.நிக்கோலஸ் கோப்பர்நிகஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு போலந்தில் “17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பெண் காட்டேரியின்” எலும்புகூடுகளை தோண்டியெடுத்துள்ளனர். மேலும் அந்த கல்லறையில், காட்டேரி மீண்டும் உயிர்த்தெழுவதை தடுக்கும் வகையில் கழுத்தின் குறுக்கே அரிவாள் மற்றும் கால்விரலில் ஒரு பூட்டும் போடப்பட்டு அடக்கம் செய்யப்பட்டிருந்ததாக ஆராச்சியாளர்கள் தெரிவித்தனர்.இதுகுறித்து பேராசிரியர் டேரியஸ் பாலின்ஸ்கி கூறுகையில், “கல்லறையிலிருந்து தோண்டியெடுக்கப்பட்ட அந்தப் பெண்ணின் வாயின் முன்பகுதியில் நீண்ட பற்கள் இருந்ததாகவும், எனவே 17ஆம் நூற்றாண்டில் அந்த பெண் ஒரு இரத்தம் உறிஞ்சும் காட்டேரியாக இருந்திருக்கலாம்” என்று கூறினார்.