• Mon. Apr 29th, 2024

விண்ணில் பறக்க தயாராகும் ஆர்டெமிஸ் 1…

Byகாயத்ரி

Sep 3, 2022

நாசாவின் ஆர்டெமிஸ் நிலவு பயண திட்டத்திற்கான முதல் ராக்கெட்டான ஆர்டெமிஸ் 1 இன்று விண்ணில் ஏவப்படுகிறது.

நிலவுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இறங்கியுள்ள நாசா தற்போது ஆர்டெமிஸ் என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் முதல் ராக்கெட் ஆர்டெமிஸ் 1 கடந்த 29ம் தேதி ஏவ இருந்த நிலையில் எஞ்சின் கோளாறு காரணமாக ஏவுதல் நிறுத்தப்பட்டது. பின்னர் ராக்கெட்டின் கோளாறுகளை சரிசெய்யும் பணியில் நாசா தீவிரமாக ஈடுபட்டது. தற்போது கோளாறுகள் சரிசெய்யப்பட்டு ஆர்டெமிஸ் 1 விண்வெளி பயணத்திற்கு தயாராக உள்ளது. இன்று ஆர்டெமிஸ் 1 விண்வெளி பயணத்தை தொடங்க உள்ளது. 42 நாட்கள் பயணிக்கும் ஆர்டெமிஸ் 1.3 மில்லியன் மைல்கள் பயணித்து நிலவை அடையும். அங்கு மனிதர்கள் தரையிறங்குவதற்கான பகுதிகள் குறித்து இது ஆய்வை மேற்கொள்ள உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *