• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

வீதிக்கு வீதி நூலகம் திட்டம்.. அசர வைக்கும் கோவை ஆணையர்!!

Byகாயத்ரி

Sep 1, 2022

வீதிக்கு வீதி நூலகம் அமைக்கும் திட்டத்தில் தனது பயணத்தை தொடங்கியுள்ள கோவை ஆணையர் பாலகிருஷ்ணன்.

வீதிக்கு வீதி நூலகம் அமைக்கும் திட்டம் என்பது ஒரு சிறந்த முயற்சிகளில் ஒன்று. முக்கியமாக இந்த திட்டம் பின்தங்கிய நிலையில் உள்ள குழந்தைகள் நல்ல முறையில் முன்னேறுவதற்காக தொடங்கப்பட்டட்டுள்ளது என்று கோவை ஆணையர் தெரிவித்தார்.கோவை ஆணையர் பாலகிருஷ்ணன் கூறுகையில், குற்றவாளிகள் தாங்களாகவே உருவாவதில்லை அவர்களை சுற்றியுள்ள சூழ்நிலைகளால் மனரீதியாக பாதிக்கப்பட்டு உருவாக்கப்படுகிறார்கள். அதனை தடுப்பதற்காக இந்த திட்டத்தை தொடங்கியுள்ளதாக” கூறினார்.குற்றவாளிகள் வளர்ந்த பின்னர் அவர்களை திருத்துவது என்பது முடியாத ஒன்று. அதனை தவிர்க்கும் வகையில் சிறுவயதிலேயே அவர்களின் மனதில் நல்ல மற்றும் சிறந்த சிந்தனைகளை உருவாக்கும் முயற்சிதான் இது என்றார் ஆணையர் பாலகிருஷ்ணன். மேலும் கோவை ஆணையரின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.