நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில், புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் வருடந்தோறும் வெகு விமர்சையாக நடக்கும் திருவிழாவில்,. கடந்த 2 ஆண்டுகளாக வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா கொரோனா காரணமாக பக்தர்களின்றி நடைபெற்றது.
இந்நிலையில் உலகப்புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் இன்று அன்னை வேளாங்கண்ணி மாதாவின் திருக்கொடியேற்றப்படவுள்ளது. இதனால் பக்தர்கள் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து காவி உடை அணிந்து சைக்கிள் மற்றும் நடை பயணம் மேற்கொண்டு திருத்தலை அடைந்துள்ளனர். வேளாங்கண்ணி ஆலய திருவிழாவையொட்டி 1,800 காவலர்களும், 200 ஊர்காவல் படையினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் 27 உயர் கண்காணிப்பு கோபுரம், 4 ஆளில்லா விமானம் , 760 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.
இன்று வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது!!
