• Fri. Sep 26th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

ரூ.10,000 அபராதம் செலுத்தினார் லிங்குசாமி..!

ByA.Tamilselvan

Aug 24, 2022

சிறைத் தண்டனையை தவிர்க்கும் விதமாக இயக்குனர் லிங்குசாமி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ரூ.10,000 அபராதம் செலுத்தினார்.
இயக்குநர் லிங்குசாமி ‘நான் ஈ’, ‘இரண்டாம் உலகம்’ படங்களைத் தயாரித்த பி.வி.பி. பைனான்ஸ் நிறுவனத்திடம் 2014-ம் ஆண்டு நடிகர் கார்த்தி, நடிகை சமந்தா நடிப்பில் ‘எண்ணி ஏழு நாள்’ என்ற படத்தைத் தயாரிப்பதற்காக, ஒரு கோடியே 3 லட்சம் ரூபாயை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்காக கடனாகப் பெற்றுள்ளார்.
அப்போது கொடுத்த 35 லட்சம் ரூபாய்க்கான காசோலைக்கு லிங்குசாமி வங்கி கணக்கில் பணம் இல்லாமல் திரும்பியதால், பிவிபி நிறுவனம் தரப்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கு சைதாப்பேட்டை 3-வது விரைவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி சந்தோஷ் தீர்ப்பளித்தார்.அத்துடன், பிவிபி நிறுவனத்திடம் பெற்ற கடனை வட்டியுடன் சேர்த்து திருப்பி செலுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த நிலையில், சிறைத் தண்டனையை தவிர்க்கும் விதமாக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் லிங்குசாமி ரூ.10,000 அபராதம் செலுத்தினார்.