• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மருத்துவகுணம் கொண்ட புலசா மீன் ரூ.20 ஆயிரத்துக்கு விற்பனை

ByA.Tamilselvan

Aug 24, 2022

ஆந்திராவில் மருத்துவகுணம் கொண்ட மீன் ரூ20 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில் வாலிபர் ஒருவர் நேற்று வலைவீசி மீன்களை பிடித்துக் கொண்டு இருந்தார். அவரது வலையில் 2 கிலோ எடையுள்ள அரிய வகை புலசா மீன் சிக்கியது. அந்த மீனை பார்வதி என்ற மீன் வியாபாரி ரூ.19 ஆயிரத்திற்கு வாலிபரிடம் இருந்து வாங்கி மீன் மார்க்கெட்டில் விற்பனைக்கு வைத்திருந்தார். புலசா வகை மீனை சாப்பிட்டால் புற்றுநோய், இதய கோளாறு மற்றும் கிட்னி பிரச்சினைகள் தீரும் என கூறப்படுகிறது. இதனால் மீனை வாங்குவதற்கு ஏராளமானவர்கள் போட்டி போட்டனர். 2 கிலோ எடையுள்ள மீனுக்கு பெண் மீன் வியாபாரி ரூ.25 ஆயிரம் விலை நிர்ணயித்து இருந்தார். கடைசியாக பைரவ பாளையத்தை சேர்ந்த விக்கி என்பவர் ரூ.20 ஆயிரத்திற்கு அந்த மீனை வாங்கி சென்றார்.