• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கேரளா சவாரி” செய்ய ரெடியா..???

Byகாயத்ரி

Aug 18, 2022

நாடு முழுவதும் ஆன்லைன் மூலம் டாக்சி புக்கிங் செய்யும் நிறுவனங்களின் செயலிகள் மக்களால் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. இந்த செயலிகளோடு தங்களை இணைத்துக் கொள்ளும் டாக்சிகள், ஆட்டோக்களுக்கு சவாரி கிடைக்கும் அதே சமயம், டாக்சி நிறுவனங்களால் குறிப்பிட்ட சதவீதம் கமிஷனாக அதிலிருந்து பெறப்படுகிறது.

இந்த கமிஷன் சதவீதம் அதிகமாக இருப்பதாக டாக்சி, ஆட்டோ ஓட்டுனர்கள் பல சமயம் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கேரள அரசு மக்களுக்கும், டாக்சி, ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் பயன்படும் வகையில் தானே டாக்சி சேவை செயலியை தொடங்கியுள்ளது. “கேரளா சவாரி” என்ற செயலி மூலமாக மக்கள் தங்களுக்கு தேவையான டாக்சி, ஆட்டோவை புக் செய்யலாம். டாக்சி, ஆட்டோ டிரைவர்கள் பெறும் கட்டணத்தில் இருந்து 8% மட்டும் கேரள அரசு கமிஷனாக பெறும் என கூறப்பட்டுள்ளது. இது தனியார் நிறுவனங்கள் பெரும் கமிஷனை விட குறைவு என கூறப்படுகிறது. இன்று முதல் இந்த சேவை கேரளாவில் தொடங்கப்படுகிறது.