• Sun. Oct 5th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

வரலாற்று நாயகன் “நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்சின்” 77 ஆவது நினைவு தினம்

ByAlaguraja Palanichamy

Aug 18, 2022

உலக வரலாற்றில் அழியா சரித்திரம் பெற்ற சுதந்திரப்போராட்ட வரலாற்று நாயகன் “நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்சின்” 77 ஆவது நினைவு தினம் இன்று அதனை நினைவு கூறுகிறார். சமூக சிந்தனையாளர் மற்றும் பேராசிரியர். முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி
மாவீரன் நேதாஜி தான் போராடி இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்று தந்தார்.
ஆனால், அவருக்கு கிடைக்கவேண்டிய, மரியாதை புகழ் மற்றும் அங்கீகாரத்தையும் காந்தி தட்டிப் பறித்துக்கொண்டார் என்று.ஒவ்வொரு சுதந்திர தினத்தின்போதும், குடியரசுத் தினத்தின்போதும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் ஆதரவாளர்கள் இன்றும் இணையாக இணையத்தில் தங்களின் மனக்குமுறல்களை அதிகமாக பதிவு செய்து வருகிறார்கள்.
உலகத்தையே ஆட்டிப் படைத்த கொடுங்கோலர்கள் என்று வர்ணிக்கப்படும் ஹிட்லர், முசோலினி போன்றோரின் உதவியுடன் நேதாஜி கடுமையாக போர் புரிந்ததால் தான், இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கியே ஆக வேண்டிய தர்மசங்கடமான நிலைக்கு ஆங்கிலேய அரசு தள்ளப்பட்டதாக நேதாஜியின் ஆதரவாளர்கள் தொடர்ந்து வாதத்தை முன்வைத்து வருகின்றன.
இந்திய சுதந்திர போராட்டத்தில் போஸின் தேசியவாத அணுகு முறை மற்றும் பங்களிப்பு ஆங்கிலேயர்களுக்கு ஒத்துவரவில்லை. எனவே 1925-ல் மாண்டலேயில் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் போஸ், அப்போது நடந்த வங்கதேச சட்டமன்ற தேர்தலில் சிறையில் இருந்தவாறே போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தங்களது தடங்கல்கள் அத்தனையும் மீறி ஒருவரால் சிறையில் இருந்து வெற்றிபெற முடியும் என்றால், இவர் நமக்கு அச்சுறுத்தல் என்று பிரிட்டீஷ் அரசு நினைக்க துவங்கியது.
காங்கிரஸ்க்குள் கருத்து மோதல்கள் ஏற்பட்டது. இந்திய தேசிய காங்கிரஸில் பிளவு ஏற்பட்டு போஸ் தனது சொந்த அமைச்சரவையை உருவாக்கினார். 1939ல் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் காந்தியால் பரிந்துரைக்கப்பட்ட சீதாராமையாவை போஸ் தோற்கடித்தார். ஆனால், காங்கிரஸ் செயற்குழுவில் இருந்தவர்களுக்கும் போஸ்க்கும் கருத்து வேறுபாடுகள் இருந்ததால், அவரால் தலைவர் பதவியைத் தொடர முடியவில்லை.
ஜூன் 22, 1939 அன்று தலைவர் பதவியில் இருந்து விலகினார் போஸ். பின், பார்வர்ட் பிளாக் என்ற கட்சியை துவங்கினார். இதற்கு ஆங்கிலேயர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இரண்டாம் உலக போரின் போது காங்கிரஸ் தலைமையை கலந்தாலோசிக்காமல் இந்தியாவின் சார்பாக வைஸ்ராய் லார்ட் லின்லித்கோ போர் அறிவித்தார். அதை போஸ் வெகுஜனமக்களின் ஆதரவு திரட்டி எதிர்த்தார். அவரது இந்த நடிவடிக்கையால் 7 நாட்கள் சிறையிலும், 40 நாட்கள் வீட்டுக்காவலிலும் வைக்கப்பட்டார்.
வீட்டுகாவலில் இருந்து 41வது நாள் மலாவியாக உடையணிந்து தப்பினார். அங்கிருந்து ஜெர்மனியை அடைந்தார். தொடர்ந்து ஆப்கானிஸ்தான், சோவியத் யூனியன், மாஸ்கோ மற்றும் ரோமுக்கு பயணம் மேற்கொண்டார். தொடர்ந்து, ஜேர்மனியின், உதவியுடன் ஆசாத் ஹிந்த் என்ற வானொலி ஒன்றின் மூலம் அந்நாட்டில் இருந்து வெள்ளையர்களுக்கு எதிராக முழங்கினார். அடுத்து, இந்தியாவின் சுதந்திரத்திற்கு ஜெர்மனி மற்றும் ஜப்பானின் உதவியை நாடினார். ஹிட்லரை போஸ் சந்திக்கையில், இந்தியர்கள் காட்டு மிராண்டிகள் என்று அவரது புத்தகத்தில் குறிப்பிட்டத்தை சுட்டிக்காட்டி அந்த வாக்கியத்தை திரும்ப பெற போஸ் கூறினார். ஹிட்லர், இந்தியா சுதந்திரம் பெறுவது கடினம் என்று தெரிவித்தார். அதற்கு போஸ் எனக்கு எவனும் அரசியல் சொல்லித் தரத் தேவையில்லை என்று உங்கள் அதிபருக்கு கூறுங்கள் என்று மொழிபெயர்பாளரிடம் கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினார். உலகில் முதல் முறையாக தன்னிடம் ஒருவர் அப்படி கூறியதால் போஸின் திராணியை நினைத்து ஹிட்லர் வியந்தார்.
போஸ் ஜெர்மனியின் தற்போதைய தலைநகரான பெர்லினில் இருந்து, ஆங்கிலேயருக்காக சண்டையிட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3000 இந்திய கைதிகளை விடுவித்து, இந்தியாவில் ஆங்கிலேயருக்கு எதிராக போராடும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்தார். இரண்டாம் உலகபோரில் ஜெர்மனியின் வீழ்ச்சி மற்றும் போரில் பின்வாங்கியது இவை அனைத்தும், ஜெர்மன் இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்க உதவும் நிலையில் இல்லை என்று போஸ் உணர்ந்தார். பின் பல இன்னல்களை சந்தித்த போஸ் 1943ஆம் ஆண்டு ஜெர்மனியில் இருந்து நீர்மூழ்கி கப்பல் மூலம் ஜப்பானை அடைந்தார்.
பின் அங்கிருந்து போஸ் சிங்கபூருக்கு சென்றார். அங்கு மோகன் சிங் அவர்களால் நிர்வப்பட்ட “ராஷ் பிஹாரி போஸ்” -ன் முழு கட்டுப்பாட்டையும் போஸ்க்கு வழங்கப்பட்டது. சுபாஷ் சந்திர போஸ்க்கு ஐ.என்.ஏ அசாத்து ஹிந்து ஃபாஜ்-ல் (இந்திய தேசிய இராணுவம்) ‘நோதாஜி’ என்று அறியப்பட்டார்.
அசாத்து ஹிந்து ஃபாஜ்ல்க்கு நேதாஜி தலைமை தாங்கியதால், இந்தியாவை நோக்கி அந்த படை முன்னேறியது. அதில், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள் தவிர மற்ற இரண்டு தீவுகள் ஸ்வராஜ் மற்றும் ஷாஹீத் என்று பெயரிடப்பட்டு முகாமாக மாற்றப்பட்டது.ஆங்கிலேயருக்கு எதிராக பர்மா தலைமையில் நடத்தப்பட்ட போராட்டத்தின் விளைவாக மணிப்பூர் இக்பால் நகரில் இந்திய தேசிய கொடி ஏற்றப்பட்டது.மற்ற நாடுகளின் அழுத்தத்தால், ஜெர்மனி மற்றும் ஜப்பான் இராணுவம், பர்மா மீது கடும் தாக்குதல் நடத்தியது எனவே நேதாஜிக்கு பின்வாங்கும் சூழல் ஏற்பட்டது. இது நேதாஜிக்கு கடும் வீழ்ச்சியாக அமைந்தது.1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதி நேதாஜி பயணம் செய்த விமானம் பர்மோசோ தீவுக்கு அருகே விபத்துக்குள்ளாகி அவர் இறந்துவிட்டார் என்று ஜப்பானிய வானொலி அறிவித்தது.

இது இந்திய மக்களை நிலைகுலையச் செய்தது நேதாஜி இறந்துவிட்டார் என்பதை பலரும் நம்பவில்லை இறுதிவரை அவரது மரணம் மர்மமாகவே புதைந்து விட்டது இந்தியாவின் முதல் ராணுவத்தை கட்டமைத்து இந்தியர்களின் ஆயுதக் கையாளுமே உலகறிய செய்ததோடு மாபெரும் பிரிட்டிஸ்ல சாம்ராஜ்யத்தை கதிகலங்காய் வைத்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் புகழ் இன்றளவும் நிலைத்திருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை