• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

உயர்நீதிமன்ற தீர்ப்பு. ஆண்டிபட்டியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்…

அதிமுகவில் நிலவிய பிரச்சனையில் உயர்நீதிமன்றம் ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. அதில் அதிமுகவில் ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலை தொடர வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியதால் ஓபிஎஸ் அணியினர் மகிழ்ச்சியடைந்தனர். இதனை தொடர்ந்து தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும் ,பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள். முன்னதாக வைகை சாலை சந்திப்பில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு பொதுக்குழு உறுப்பினர் சேட். அருணாச்சலம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் நிர்வாகி எம்.பி. பழனி, ஆவின் இயக்குனர் இளையராஜா, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் சின்ன ராஜா, ஆகியோர் முன்னிலை வைத்தனர். நிகழ்ச்சியில் இளைஞர் அணி திருச்சந்திரன் ,சிறுபான்மை பிரிவு ஒன்றிய செயலாளர் சாம்சன், மற்றும் நிர்வாகிகள் துரைப்பாண்டி, செல்வம், குமார், மருது ,புகழேந்திரன், ராமச்சந்திரன், சக்திவேல், செல்வம், ஆதிநாராயணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு முத்துக்குமார், பாசறை ஒன்றிய செயலாளர் நாகராஜ், பாண்டி முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.