• Wed. Jan 21st, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அரசு கேபிள் ஆபரேட்டர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு – மதுரை பரபரப்பு

Byகுமார்

Sep 25, 2021

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் வசித்துவரும் துரைராஜ் என்பவர் அந்த பகுதியில் வானவில் என்ற பெயரில் அரசு கேபிள் ஆபரேட்டராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் கிராம பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவர் அவரிடம் தனக்கு கேபிள் ஆப்பரேட்டர் உரிமத்தை தரும்படி கடந்த சில மாதங்களாக மிரட்டி வந்துள்ளார்.

தான் நான்கு கொலைகளுக்கு மேலாக செய்துள்ளதாகவும் எனவே கேபிள் ஆபரேட்டர் உரிமத்தை தன்னிடம் ஒப்படைக்குமாறு தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வந்த ஆனந்த் துறைராஜ் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி விட்டு சென்றுள்ளார்.

தற்போது ஆனந்தை ஜெய்ஹிந்துபுரம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

செய்தியாளர்  -சிந்து