• Mon. Oct 13th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

கொலை டிரைலர் வெளியீட்டு விழா தொகுப்பு

பாலாஜி K குமார் எழுதி இயக்க, விஜய் ஆண்டனி முதன்மை கதா பாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் ‘கொலை’. Infiniti Film Ventures நிறுவனம் Lotus Pictures உடன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின்வித்தியாசமான மோஷன் போஸ்டர் அறிமுகத்தால் ரசிகர்களின் ஆவலை தூண்டிய கொலை திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று மாலை வெளியானது இதனையொட்டி சென்னையில்நடைபெற்ற விழாவில்

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது.

கொலைபடம் உருவாக முழு காரணம் விஜய் ஆண்டனி சார் தான். இயக்குனர் பாலாஜி மிகவும் திறமையான நபர், அவருக்கு பல நுட்பங்கள் தெரியும். அவருடன் பணிபுரிந்தது பெரிய மகிழ்ச்சி. இயக்குநர் இந்த திரைப்படத்தை நேர்த்தியாக செதுக்கியுள்ளார். படத்தின் முடிவு எப்படி வரும் என்பதை ரகசியமாய் வைத்து, சிறப்பாக உருவாக்கி கொண்டு இருக்கிறார். இந்த படத்தின் ஒளிப்பதிவும், படதொகுப்பும் பாராட்டபடும். இந்த படம் இயக்குநர் மிஷ்கினுக்கு ஒரு டிரிபுயூட்டாக இருக்கும் என்றார்

இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் பேசியதாவது.

கொலை படத்தின் திரைக்கதையை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். அவர் படத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவருக்கு திரைப்படங்கள் தான் எல்லாமே. இந்த படத்தின் இசையில் ஒரு புதுவித இசை ஒலியை கொடுக்க முயற்சித்து இருக்கிறோம் என்றார்

நாயகி ரித்திகா சிங் பேசியதாவது.

இந்த படத்தின் கதையை கேட்டபோதே, நான் கதைக்குள் ஆழமாக போய்விட்டேன். கதையின் முடிவை தெரிந்துகொள்ள நானும் விரும்பினேன். இந்த படத்தில் பலர் நடித்துள்ளனர். அனைவரும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர், அனைவருக்கும் முக்கியமான கதாபாத்திரமாக இருக்கும். இப்படம் பார்வையாளர்களுக்குமிகச்சிறந்த அனுபவமாக இருக்கும் என்றார்

இயக்குநர் பாலாஜி குமார் பேசியதாவது.

இந்த தருணத்திற்காக நாங்கள் பல வருடம் காத்திருந்தோம். இந்த படம் உருவாக மிக முக்கியமான காரணம் விஜய் ரத்தினமும், விஜய் ஆண்டனியும் தான். இந்த கதையை விஜய் ஆண்டனியிடம் நான் கூறியபோது, அவர் கதைக்குள் மூழ்கிவிட்டார்.
அவர் ஒப்புக்கொள்வார் என நான் எதிர்பார்க்கவில்லை.
அனைவரும் ரசிக்கும்படியான இரண்டாவது தடவை பார்க்கும் படியான படைப்பாக இது இருக்கும் என்றார்

இயக்குனர் மிஷ்கின் பேசியதாவது..

இயக்குனர் பாலாஜி, சினிமாவின் நுணுக்கங்கள் தெரிந்த ஒரு தொழில்நுட்ப கலைஞர். அவர் சினிமாவை படிப்பாக கற்றுகொண்டவர். கொலை மனிதர்களுடன் எப்போதும் நெருக்கமான ஒன்று. இந்த படத்தின் டிரைலர் பார்ப்பதற்கு ஈர்க்கும் வகையில் இருக்கிறது. படத்தின் இசை ரசிக்கும் படி இருக்கிறது என்றார்

நடிகர் விஜய் ஆண்டனி பேசியதாவது

இந்த படத்தில் இணைந்திருப்பதே பெருமையான விஷயம். இந்த படம் இயக்குனர் பாலாஜியின் கனவு. நான் உறுதியாக தன்னம்பிக்கையுடன் கூறுகிறேன், இந்த படம் உலகதரமிக்க சிறந்த படமாக இருக்கும். இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த வரங்கள். அவர்களுக்கு நிறைய அனுபவம் இருக்கிறது. இவர்களுடன் இணைந்தது எனக்கு மகிழ்ச்சி. இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் சிவக்குமார், இந்த படத்தின் மீதும், இயக்குநர் மீதும் மிகுந்த நம்பிக்கையும் பற்றும் கொண்டு இருக்கிறார். ஒரு இசையமைப்பாளராக, இந்த படத்தின் இசையமைப்பாளருடைய
பணி எனக்கு உலகதரமாக தெரிகிறது என்றார்