• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஓடிடியில் வெளியாகிறது சாய்பல்லவியின் “கார்கி”..

Byகாயத்ரி

Aug 12, 2022

பிரேமம் படம் மூலம் மலையாள சினிமா உலகில் அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. ஆனாலும் அந்த ஒரே படத்தின் மூலம் அவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அதன் பிறகு அவர் எல்லா மொழி படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த விராட பர்வம் திரைப்படம் பரவலான பாராட்டுகளைப் பெற்றது. இந்நிலையில் அவர் நடிப்பில் சமீபத்தில் ‘கார்கி’ திரைப்படம் ஜூலை 15 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிட்டது. மிகப்பெரிய அளவில் பாராட்டுகளைப் பெற்ற கார்கி திரைப்படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி இன்று முதல் சோனி லிவ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.