

தமிழ்நாடு முழுவதும் உள்ளூர் அரசு பேருந்துகளில் பெண்கள், ஊனமுற்றவர்கள் மற்றும் மாற்று பாலினத்தார் உள்ளிட்டோருக்கு இலவசமாக பயணிக்கும் திட்டத்தை தமிழக அரசு சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தியது.
இதனால் பலரும் பலனடைந்து வருகின்றனர். சில சமயம் பெண்கள் இலவச பேருந்து என நினைத்து டீலக்ஸ் மற்றும் சொகுசு பேருந்துகளில் ஏறிவிடுவதும் நடக்கிறது. இதனால் இலவச பேருந்தை அடையாளம் காணும் விதமாக அதற்கு பிங்க் கலர் வண்ணம் பூசப்பட்டது. ஆனால் பேருந்தின் முகப்பு மற்றும் பின்புறத்திற்கு மட்டுமே பிங்க் அடிக்கப்பட்டிருந்தது சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு உள்ளானது. இதன் எதிரொலியாக இலவச பேருந்துகள் அனைத்திற்கும் முழுவதுமாக பிங்க் நிறம் அடிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. முழுமையாக பிங்க் நிறத்தில் உள்ள பஸ் அழகாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.அதுபோக தற்போது இதை பற்றிய கிண்டல்கள் குறைந்துள்ளது.
