• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பணம் இல்லாததால் தாயின் உடலை மகன் பைக்கில் கொண்டு சென்ற அவலம்..!

Byகாயத்ரி

Aug 2, 2022

தாயின் சடலத்தை ஆம்புலன்ஸில் எடுத்துசெல்ல பணம் இல்லை என்பதால் அவரது மகன் பைக்கில் தன் தாயின் சடலத்தை எடுத்துக்கொண்டு சென்ற காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவரின் தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடலை வீட்டிற்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்ல 5000 கட்டணம் கேட்கப்பட்டது. ஆனால் ரூபாய் 5000 செலுத்த அவரிடம் இல்லாததால் தனது பைக்கிலேயே தாயின் சடலத்தை கட்டி இழுத்துச் சென்றார். 80 கிலோ மீட்டர் தூரம் வரை தனது கிராமத்திற்கு பைக்கிலேயே சடலத்துடன் சென்ற அவர் செல்லும் வழியில் தாயின் சடலத்தை எரிக்க விறகையும் வாங்கி கட்டி எடுத்துச் சென்றுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி அனைவரது மனதையும் உலுக்கியுள்ளது. ஏழ்மையின் நிலை மிகவும் கொடூரமானது என்பதற்கு இதுவே சாட்சி…