• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அங்கமாலி டைரீஸ் படத்தின் நடிகர் சடலமாக மீட்பு…

Byகாயத்ரி

Jul 30, 2022

அங்கமாலி டைரீஸ் படத்தின் துணை நடிகர் சரத் சந்திரன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள இளம் நடிகர் சரத் சந்திரன் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 37 வயதான நடிகர் சரத் சந்திரன் அங்கமாலி டைரீஸ், கூடே, ஒரு மெக்சிகன் அபாரத போன்றவற்ற திரைப்படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.நடிகர் ஆண்டனி வர்கீஸ் “அங்கமாலி டைரீஸ்” படத்திலிருந்து சரத் சந்திரனின் படத்தைப் பகிர்ந்துகொண்டு “இரங்கல் பிரதர்” என்று சமூக வலைதளத்தில் அஞ்சலி தெரிவித்துள்ளார். கொச்சியைச் சேர்ந்த சரத் சந்திரன், முன்பு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்ததோடு, டப்பிங் கலைஞராகவும் திரைப்படத்தில் பணியாற்றியுள்ளார். மலையாள திரையுலகில் “அனீஸ்யா” படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.