• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நல்ல வாய்ப்புகள் இல்லை… தவிக்கும் நடிகர் மொட்ட ராஜேந்திரன்..

Byகாயத்ரி

Jul 27, 2022

தமிழ் சினிமாவில் ஸ்டன்ட் கலைஞராக அறிமுகமாகி 100 படங்களுக்கு மேல் அதே பணியை செய்து பின் நான் கடவுள் படத்தின் மூலம் வில்லனாக களமிறங்கியவர் மொட்ட ராஜேந்திரன்.

மக்கள் மனதில் நிற்கும் அளவிற்கு வேலாயுதம், சிங்கம் 2, ராஜா ராணி, தெறி, ரெமோ என தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார். இடையில் காமெடியனாக கூட சில படங்களில் கலக்கினார்.தமிழை தாண்டி மலையாளம், கன்னடம், ஹிந்தி, தெலுங்கு மொழிகளிலும் படங்கள் நடித்து வந்துள்ளார்.தரமான வேடங்களாக தேர்வு செய்து நடிக்காமல் கிடைக்கும் படங்களில் எல்லாம் நடித்து வந்த ராஜேந்திரனுக்கு இப்போது பட வாய்ப்புகளே வருவது இல்லை. நல்ல திறமை இருந்தும் அவருக்கு பட வாயப்புகள் வராதது கொஞ்சம் சோகத்தை கொடுக்கிறது.